Published:Updated:

ஜூ.வி செய்தி எதிரொலி: வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் கைது!

அடிகுழாய் - சுரேந்தர்பாபு

அடிகுழாயோடு சேர்த்து கால்வாய் கட்டிய விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஜூ.வி செய்தி எதிரொலி: வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் கைது!

அடிகுழாயோடு சேர்த்து கால்வாய் கட்டிய விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
அடிகுழாய் - சுரேந்தர்பாபு

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், வேலூர் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் வேலைகள் நடப்பதால், கோடி கோடியாகப் பணம் விரயமாவதுடன், ஏகப்பட்ட முறைகேடுகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில், மாநகராட்சி 2-வது மண்டலத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் கால்வாய் போடும்போது, அங்கிருந்த அடிகுழாயை அகற்றாமலேயே கான்கிரீட் கலவையைக் கொட்டி கட்டியிருக்கிறார்கள். இதில் அடிகுழாய் புதையுண்டுபோனது.

ஒப்பந்ததாரர் சுரேந்தர்பாபு
ஒப்பந்ததாரர் சுரேந்தர்பாபு

இதை, ஜூனியர் விகடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கால்வாயோடு புதைக்கப்பட்ட அடிகுழாயை அகற்றியது மாநகராட்சி நிர்வாகம். அதோடு, வேலூர் கலாஸ்பாளையத்தைச் சேர்ந்த சுரேந்தர்பாபு (வயது 49) என்பவரது நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்துசெய்யப்பட்டது. அவர் இனிவரும் காலங்களில் வேலூர் மாநகராட்சியில் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் எடுக்க முடியாது என்றும் மேயர் சுஜாதா தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், ஒப்பந்ததாரர் சுரேந்தர்பாபு சத்துவாச்சாரி போலீஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 2-வது மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில், அவர்மீது பொதுச்சொத்தைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.