Published:Updated:

குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! - வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

விளாத்திகுளம் காவல் நிலையம்

தூத்துக்குடியில் ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள்மீது குண்டாஸ் போடாமல் காப்பாற்றுவதாகக் கூறி எஸ்.ஐ ஒருவர், 3 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! - வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

தூத்துக்குடியில் ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள்மீது குண்டாஸ் போடாமல் காப்பாற்றுவதாகக் கூறி எஸ்.ஐ ஒருவர், 3 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
விளாத்திகுளம் காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருட்டுப்போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்வையிட்டபோது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 17-ம் தேதி வாகனச் சோதனையின்போது அந்தக் கும்பல் பிடிபட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், ஆறுமுகம் ஆகிய இரண்டு பேரை தனிப்படை போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர்.

கங்கைநாத பாண்டியன்
கங்கைநாத பாண்டியன்

காரைக்குடியில் மட்டன் கடை நடத்திவந்த முகம்மது அராபத், ஆசிக் இருவருக்கும் ஆடுகளைத் திருடிக் கொண்டுவந்து கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன், நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், அதேபோன்று ஆசிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம், ஆசிக்ராஜா ஆகியோரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆடுகளைத் திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்களில், முகம்மது அராபத், பாண்டிச்செல்வம், பாலமுருகன் மூவரும் புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி காவல் நிலையக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில்தான் தனிப்படையில் இருந்த விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆடு திருடும் வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பலிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யாமல்ல் இருக்கவும், அதிலிருந்து காப்பாற்றுவதாகச் சொல்லியும் ரூ.3 லட்சம் பணம் கேட்டதாகச் சில ஆடியோக்கள் வைரலாகிவருகின்றன.

முன்னாள் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கங்கைநாத பாண்டியன்
முன்னாள் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கங்கைநாத பாண்டியன்

திருச்சியில் ஆடு திருடும் கும்பலைப் பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் கைதுசெய்ய முயன்றதாகவும் சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் வைரலாகப் பரவிவருகின்றன. அவற்றில் ஒரு ஆடியோவில், ``குண்டாஸ் கேஸ் போடணும்னா நான்தான் அதைச் செய்யணும்” எனச் சொன்னதும், ``சார் கேஸ்லாம் போட்டுடாதீங்க சார். நான் நேர்ல வர்றேன்” என வழக்கில் தொடர்புடையவர் சொல்கிறார். அவரின் அம்மா என ஒரு பெண் பேசி, ``எவ்வளவு பணம்னாலும் தர்றோம். குண்டாஸ் போட வேண்டாம்” எனச் சொல்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதிலுக்கு பேசிய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் என சொல்லப்படும் நபர், ``மூணு லட்சம் தாங்க’’ எனச் சொல்கிறார். அடுத்த சில ஆடியோக்களில் காவல் நிலையத்தில் குற்றவாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போன், வாகனங்களை மீட்பது தொடர்பாகப் பேசப்பட்டதுபோல உள்ளது. இந்த செல்போன் உரையாடல் குறித்து விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியனிடம் கேட்டோம். ``என்னைப் பழிவாங்கும் நோக்கில் எடிட் செய்யப்பட்டு அந்த ஆடியோ பதிவேற்றப்பட்டிருக்கு.

கைதுசெய்யப்பட்ட ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள்
கைதுசெய்யப்பட்ட ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள்

இந்த வழக்குல தொடர்புடைய மேலும் ரெண்டு குற்றவாளிகளை பிடிப்பதற்காகத்தான், இப்படி குற்றவாளிகளிடம் அவர்களைக் காப்பாற்றுவதுபோலவும், அவர்களை நம்பவைக்கப் பணம் கேட்டுப் பேசினேன். இதையறிந்த குற்றவாளிகள் என்னைச் சிக்கவைக்க வேண்டும் என்பதற்காக தற்போது நான் பேசிய ஆடியோக்களை முழுமையாகப் பதிவிடாமல் எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். நான் நிலுவையிலுள்ள பல குற்ற வழக்குகளைக் கண்டுபிடிச்சிருக்கேன். என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தமில்லாத, ஆதாரமில்லாத தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன” என்றார்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ``இந்த உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், திருட்டு, கொள்ளை போன்ற நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளைக் கையில் எடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைதுசெய்து திருடப்பட்ட பொருள்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்தி திறம்படச் செயல்பட்டார். அதற்காக இவர் பலமுறை பாராட்டுச் சான்றிதழ்கள், வெகுமதிகளை எஸ்.பி-யிடமிருந்தும், கலெக்டரிடமிருந்தும் பெற்றுள்ளார்” என்கின்றனர் சக போலீஸார்.

உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகள்
உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகள்

இந்த நிலையில், உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்தக் கடிதத்தில், “என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் என்னை ஆயுதப்படைக்கு மாற்றியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியைத் துறக்க முன் வந்துள்ளேன். இதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism