Published:Updated:

``நுபுர் ஷர்மாவைக் கொல்லவே வந்தேன்!" - எல்லை கடந்துவந்த பாகிஸ்தான் நபர், ராஜஸ்தானில் கைது

நுபுர் ஷர்மா

நுபுர் ஷர்மாவைக் கொலைசெய்யும் திட்டத்துடன் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் நபரை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``நுபுர் ஷர்மாவைக் கொல்லவே வந்தேன்!" - எல்லை கடந்துவந்த பாகிஸ்தான் நபர், ராஜஸ்தானில் கைது

நுபுர் ஷர்மாவைக் கொலைசெய்யும் திட்டத்துடன் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் நபரை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நுபுர் ஷர்மா

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் கண்டனம், இஸ்லாமியர்களின் போராட்டங்கள் எனப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தற்போது சற்றே ஓய்ந்திருக்கிறது.

இந்த நிலையில், நுபுர் ஷர்மாவைக் கொலைசெய்யும் திட்டத்துடன் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் நபரை, எல்லை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், கடந்த 16-ம் தேதி இரவு 11 மணியளவில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் இந்துமல்கோட் எல்லைப் புறக்காவல் நிலையத்துக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரால், கைதுசெய்யப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.

சந்தேகத்துக்குரிய பாகிஸ்தானியர் கைது
சந்தேகத்துக்குரிய பாகிஸ்தானியர் கைது

சோதனையில் அந்த நபர் வைத்திருந்த பையில், 11 அங்குல நீளமுள்ள கத்தி, மதப் புத்தகங்கள், உடைகள், உணவுகள் மற்றும் மணல் ஆகியவை இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாப்பில் அமைந்திருக்கும் மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்த ரிஸ்வான் அஷ்ரப் என்று அடையாளம் காணப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

அது மட்டுமல்லாமல், முதற்கட்ட விசாரணையில், நுபுர் ஷர்மாவைக் கொல்லவே எல்லை தாண்டி வந்ததாகவும், அதற்கு முன்னதாக அஜ்மீர் தர்காவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும், அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 24 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அந்த நபரிடம், புலனாய்வுப் பணியகத்தின் (ஐ.பி) கூட்டுக்குழு மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திவருகின்றன.