Published:Updated:

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை; சிக்கிய தலைமைக் காவலர்... தொடர் சர்ச்சையில் வேலூர் சிறை!

வேலூர் மத்திய சிறை

வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த தலைமைக் காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை; சிக்கிய தலைமைக் காவலர்... தொடர் சர்ச்சையில் வேலூர் சிறை!

வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த தலைமைக் காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Published:Updated:
வேலூர் மத்திய சிறை

வேலூர் மத்திய சிறையில் புகையிலை, கஞ்சா, பீடி, சிகரெட், செல்போன், சிம்கார்டு போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்கள் கைதிகளிடம் எளிதாகப் புழுங்குகின்றன. அவ்வப்போது, சிறைக் காவலர்கள் மேற்கொள்ளும் சோதனையில் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. கடந்த வாரம் சிறை வளாகம் மற்றும் கழிவறைப் பகுதிகளில் சிறைக் காவலர்கள் சோதனை செய்தபோது, தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஏழாவது பிளாக்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரி ஆகியவற்றைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதே பிளாக்கில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 15 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் பேட்டரி ஆகியவை சிக்கின.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

விசாரணையில், தலைமை சிறைக் காவலரான விஜயகுமார் என்பவர்தான் கைதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்கிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாரைப் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. தலைமைக் காவலர் விஜயகுமார் இதுவரை எவ்வளவு கஞ்சாவை சப்ளை செய்திருக்கிறார். போதைப்பொருள்கள் தவிர்த்து, செல்போன், சிம் கார்டு போன்றவற்றையும் கைதிகளுக்கு வழங்கிப் பணம் பார்த்தாரா என்பது குறித்தும் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். இது தொடர்பாக, பாகாயம் போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism