Published:Updated:

கர்நாடகா: கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட கார்; மாயமான எம்.எல்.ஏ மருமகன் உடல், அழுகிய நிலையில் மீட்பு

மீட்கப்படும் கார் ( ட்விட்டர் )

கடந்த நான்கு நாள்களாக காணாமல்போன கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மருமகனின் உடல், கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட காரில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா: கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட கார்; மாயமான எம்.எல்.ஏ மருமகன் உடல், அழுகிய நிலையில் மீட்பு

கடந்த நான்கு நாள்களாக காணாமல்போன கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மருமகனின் உடல், கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட காரில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மீட்கப்படும் கார் ( ட்விட்டர் )

கர்நாடக மாநிலம், ஹொன்னாலி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யா. இவரின் மருமகன் சந்திரசேகர் (25) அக்டோபர் 30-ம் தேதி ஷிவமொக்காவிலிருந்து ஹொன்னாலிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால், வீட்டுக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து அவரின் தந்தை ரமேஷ், தன் மகனைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரைக் கண்டுபிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர்.

மீட்கப்படும் கார்
மீட்கப்படும் கார்
ட்விட்டர்

இந்த நிலையில், தாவங்கரே மாவட்டத்திலுள்ள துங்கா கால்வாயில் வெள்ளை நிற எஸ்யூவி கார் இருப்பதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறையினரால் அந்த கார், கிரேன் மூலம் கால்வாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. அப்போதுதான் இது பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாவின் மருமகன் சந்திரசேகரின் கார் என்பது தெரியவந்தது. மேலும், அதற்குள் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில், அது எம்.எல்.ஏ-வின் மருமகன் சந்திரசேகரின் உடல் என்பது உறுதியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை," விபத்துக்குப் பிறகு கார் கால்வாயில் விழுந்ததா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக காவல்துறை
கர்நாடக காவல்துறை
ட்விட்டர்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எந்த வகையில் உதவி என்றாலும் செய்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.