Published:Updated:

சென்னை மருத்துவ மாணவர் கைது! -வேகமெடுக்கும் நீட் தேர்வு மோசடி வழக்கு

தேனி சிபிசிஐடி அலுவலகம்
தேனி சிபிசிஐடி அலுவலகம்

விசாரணையின் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் என்ற மருத்துவ மாணவரை, சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேனி அழைத்துவந்தனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேனி சிபிசிஐடி அலுவலகம்
தேனி சிபிசிஐடி அலுவலகம்
`சீனாவிலிருந்து திரும்பினர்; கொரோனா அச்சம்!'- தேனி  மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இருவர்

இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து, தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் தொடர் விசாரணை செய்து, இதுவரை 5 மாணவர்கள், 6 மாணவர்களின் பெற்றோர்கள், ஒரு இடைத்தரகர் என அடுத்தடுத்து கைது செய்தனர்.

இவர்கள் அனைவருக்கும் மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர் ரஷித் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் என்ற மருத்துவ மாணவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார், பிடித்து இன்று மாலை தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில், நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். இன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
மகாராஷ்டிராவில் தேர்வு; தேனி  மருத்துவக் கல்லூரியில் சீட்!-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில், அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் நிலையில், நீண்ட நாள்களாகத் தூங்கிக்கொண்டிருந்த நீட் வழக்கில், ஒரு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு