Published:Updated:

கொடநாடு வழக்கு: எஸ்டேட்டுக்கு என்ட்ரி கொடுத்த சிபிசிஐடி, டிஜிபி - ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணை!

சி.பி.சி.ஐ.டி

தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டன.

கொடநாடு வழக்கு: எஸ்டேட்டுக்கு என்ட்ரி கொடுத்த சிபிசிஐடி, டிஜிபி - ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணை!

தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டன.

Published:Updated:
சி.பி.சி.ஐ.டி

கொடநாடு வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிப்படை அமைக்கப்பட்டு கூடுதல் புலன் விசாரணை தொடங்கப்பட்டது. ஓராண்டுக்காலமாக நடத்தப்பட்ட இந்தக் கூடுதல் புலன் விசாரணையில் 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை மேற்கொண்டது தனிப்படை. கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டியிலுள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

சி.பி.சி.ஐ.டி
சி.பி.சி.ஐ.டி

இந்த நிலையில், கொடநாடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணை அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டன.

சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி முகமது ஷகீல் அக்தர் தலைமையிலான குழுவினர் கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவில் முதன்முறையாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். மதியம் 2:30 மணியளவில் உள்ளே சென்ற சி.பி.சி.ஐ.டி குழுவினர், கொள்ளைக் கும்பல் உள்ளே நுழைந்த நுழைவுவாயில், காவலாளி கொலைசெய்யப்பட்ட பகுதி, கொள்ளை நடந்த இடம் எனப் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சி.பி.சி.ஐ.டி
சி.பி.சி.ஐ.டி

கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தனர். ஒன்றரை மணி நேரம் விசாரணையில் ஈடுபட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார் அங்கிருந்து கிளம்பினர். அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.