சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸில், ``மர்ம நபர்கள் ஆறு பேர் என்னைத் தொடர்புகொண்டு, `நீங்கள் தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுத்துவருவது எங்களுக்குத் தெரியும். அதனால், உங்கள் மீது நாங்கள் போலீஸில் புகாரளிக்கப்போகிறோம். நீங்கள் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டுமென்றால், எங்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்' என்று மிரட்டினார்கள். எனக்கு எந்தத் தீவிரவாதியுடனும் தொடர்பு கிடையாது, அதனால் பணம் பறிக்கும் நோக்கில் என்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்திருந்தார்.

அவர் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இது தொடர்பான விசாரணையில் இறங்கினர். அப்போது, மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) அதிகாரிகளான சுமித் குப்தா, பிரதீப் ராணா, அங்கூர் குமார், ஆகாஷ் அஹ்லாவத் ஆகிய நான்கு பேர் அந்தத் தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையடுத்து, போலீஸார் அளித்த தகவலின்பேரில், மத்திய புலனாய்வுத்துறை அந்த நான்கு பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த நான்கு பேரையும் நேற்று மத்திய புலனாய்வுத்துறை கைதுசெய்தது.