Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: தஞ்சாவூர் பள்ளியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை!

மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

சி.பி.ஐ அதிகாரிகள் வார்டன் சகாய மேரி, நிர்வாகி ராக்கேல் மேரி, கன்னியாஸ்திரீகள், ஆசிரியர்கள், மாணவிகள் என அனைத்துத் தரப்பிலும் விசாரணை மேற்கொண்டனர்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: தஞ்சாவூர் பள்ளியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை!

சி.பி.ஐ அதிகாரிகள் வார்டன் சகாய மேரி, நிர்வாகி ராக்கேல் மேரி, கன்னியாஸ்திரீகள், ஆசிரியர்கள், மாணவிகள் என அனைத்துத் தரப்பிலும் விசாரணை மேற்கொண்டனர்.

Published:Updated:
மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அரியலுார் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த17 வயது மாணவி ஒருவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் மரணத்துக்கு அவர் தங்கிப் படித்த ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதே காரணம் என சர்ச்சை எழுந்தது.

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி
தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி

இது தொடர்பாக இறப்பதற்கு முன்பு அந்த மாணவி பேசிய இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதில் அதிக பணிச்சுமையைக் கொடுத்ததாகவும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதம் மாறச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என பி.ஜே.பி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தின. மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதே தங்கள் மகள் தற்கொலைக்குக் காரணமென மாணவியின் பெற்றோர் புகார் எழுப்பினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினரும் விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலை விவகாரத்தில் இருவிதமான கருத்துகள் நிலவிய நிலையில், பி.ஜே.பி சார்பில் அமைக்கப்பட்ட அந்தக் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர்கொண்ட குழுவும் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹாஸ்டல் வார்டனான சகாயமேரி ஜாமீனில் வெளிவந்தார். இதேபோல் பள்ளி நிர்வாகியான ராக்கேல் மேரியும் முன்ஜாமீன் வாங்கினார். மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை சி.பி.ஐ அதிகாரிகள்,18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்குத் துாண்டுதல் உள்ளிட்ட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், சி.பி.ஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில், கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, டி.எஸ்.பி-க்கள் ரவி, சந்தோஷ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதிக்குச் சென்றனர். முதலில் திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தி பள்ளி வகுப்பறை, மாணவி விடுதியில் தங்கியிருந்த அறை, ஆசிரியர்கள் தங்கும் அறை, கன்னியாஸ்திரீகள் தங்கும் அறை என அனைத்துப் பகுதிகளையும் ஆய்வுசெய்தனர்.

மாணவி தங்கிப் படித்த ஹாஸ்டல்
மாணவி தங்கிப் படித்த ஹாஸ்டல்

மேலும், பள்ளி வளாகங்கள் முழுவதையும் புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து வார்டன் சகாய மேரி, நிர்வாகி ராக்கேல் மேரி, கன்னியாஸ்திரீகள், ஆசிரியர்கள், மாணவிகள் என அனைத்துத் தரப்பிலும் விசாரணை மேற்கொண்டனர். அவற்றை வீடியோ பதிவுசெய்துகொண்டனர். சி.பி.ஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட பள்ளியில் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism