Published:Updated:

சாத்தான்குளம்: பொங்கிய பால்துரை புன்னகைக்க என்ன காரணம்? - சூடுபிடிக்கும் விசாரணை

பால்துரை
பால்துரை

முதல்கட்டமாக ஐவரை விசாரித்த சி.பி.ஐ, அடுத்தகட்டமாக மீதமுள்ள ஐவரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதில் ஒருவர்தான் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை.

வேகமெடுத்த சிபிஐ விசாரணை..! சாத்தான்குளம் வட்டாரத்தில் பரபரப்பு! | Sathankulam

சாத்தான்குளம் விவகாரம் சி.பி.ஐ விசாரணையின் விளைவாக சூடுபிடுக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை 10 பேர் கைது செய்யபப்பட்டு, அதில் 5 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஐந்து நபர்களை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது சி.பி.ஐ. விசாரிக்கப்பட இருக்கும் நபர்களில் ஒருவரான சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, உடல்நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார்.

சாத்தான்குளம்: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முன்பு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனை ஏன்?
பால்துரை
பால்துரை

முன்னதாக, வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், பால்துரை உட்பட அனைவரையும், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில், பால்துரையின் மனைவி, மகள், மருமகன் எனக் குடும்ப உறுப்பினர்கள் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் முன்னர் வந்து அழுது புலம்பினர். அப்போது பேசிய பால்துரையின் மனைவி,``என் கணவர் பழிவாங்கப்படுகிறார். சி.பி.சி.ஐ.டி ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. இந்த பிரச்னைக்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறினார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னர், மருத்துவ பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பால்துரை அழைத்துவரப்பட்டபோது, இருக்கையில் அமர்ந்துகொண்டு எழுதிருக்க மறுத்த பால்துரை, `என்னை வேணும்னே இந்த வழக்குல சிக்க வச்சுருக்காங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல. இந்த வழக்கால என் வாழ்க்கையே போச்சு. சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளும் மீடியாக்களும்தான் என்னோட கைதுக்குக் காரணம்’ என்று சத்தமாக சக போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.

யார் இந்த பால்துரை? அவரது பின்னணி என்ன? அவருக்கும் சாத்தான்குளம் வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து விசாரித்தோம்.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் காவலர், தலைமைக்காவலராக இருந்து பதவி உயர்வில் சிறப்பு உதவி ஆய்வாளாராக 5 மாதத்துக்கு முன்னர், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் தற்போது பி.ஆர்.ஓவாகப் பணிபுரிந்து வரும் சத்தியநாராயணனின் மைத்துனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆய்வாளார் ஸ்ரீதர், குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ-யாகப் பணிபுரிந்த காவல் நிலையங்களில் கார் டிரைவராகப் பால்துரை பணிபுரிந்துள்ளார்.

பால்துரை
பால்துரை

பால்துரை பணியாற்றிய தட்டார்மடம் காவல்நிலையத்தில் உள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கும் இவருக்கும் வழக்கு விசாரணைகளில் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அப்போதைய டி.எஸ்.பி பிரதாபன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தற்காலிக பொறுப்பு எஸ்.எஸ்.ஐயாக (டூயிங்க் டூட்டி) பால்துரையை நியமித்திருக்கிறார். அதன்படி, கடந்த ஜூன் 16-ம் தேதி சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு வந்திருக்கிறார் பால்துரை.

ஜெயராஜின் மனைவி செல்வராணி அளித்த புகாரில் பால்துரையின் பெயர் உள்ளது. அதே நேரம், ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில், `பால்துரையும் சேர்ந்துதான் இருவரையும் தாக்கினர்’ எனக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

சாத்தான்குளம் முதல் ஸ்வப்னா வரை... விசாரணையில் புது திருப்பம்! | The Imperfect Show 13/7/2020

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்ட பால்துரை, உடல்நிலை சீராகி, கடந்த 14-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு அன்று இரவே, மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். கைது அன்று மருத்துவமனையில் பொங்கிய பால்துரை, 14-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்ற போது புன்னகைத்தவாறே சென்றுள்ளார். அவரது ஆவேசத்திற்கும் புன்னகைக்கும் என்ன காரணம் என்பது இனி சி.பி.ஐ விசாரணையில்தான் தெரியவரும் என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள்.

அடுத்த கட்டுரைக்கு