Published:Updated:

மண்டை உடைப்பு... தடியடி - கோவை வெள்ளலூர் மறைமுகத் தேர்தலில் மீண்டும் பஞ்சாயத்து!

வெள்ளலூர்

கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் மீண்டும் பிரச்னை வெடித்ததால், போலீஸ் தடியடி நடத்தினர்.

மண்டை உடைப்பு... தடியடி - கோவை வெள்ளலூர் மறைமுகத் தேர்தலில் மீண்டும் பஞ்சாயத்து!

கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் மீண்டும் பிரச்னை வெடித்ததால், போலீஸ் தடியடி நடத்தினர்.

Published:Updated:
வெள்ளலூர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக பெருவாரியான வெற்றியைப் பெற்றது. மாநகராட்சி, நகராட்சிகளை திமுக முழுவதுமாகக் கைப்பற்ற, மொத்தமுள்ள 33 பேருராட்சிகளில் வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.

வெள்ளலூர்
வெள்ளலூர்

இதற்கிடையே, மறைமுகத் தேர்தல் நடைபெறவிருந்த தினம் அங்கு திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக அங்கு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக இதைக் கடுமையாக கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இதையடுத்து மறைமுகத் தேர்தல் நடைபெறாத வெள்ளலூர், அன்னூர், திருமலையம்பாளையம் பேரூராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.

காயமடைந்தவர்
காயமடைந்தவர்

வழக்கம்போல திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. 4-வது வார்டு திமுக கவுன்சிலர் குணசுந்தரி என்பவரின் கணவரை, அதிமுக-வினர் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து திமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக-வினரும் கோஷம் எழுப்பி, தள்ளுமுள்ளாகி போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து, திமுக கவுன்சிலர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு மறைமுகத் தேர்தலை நடத்திவருகின்றனர். தாக்குதல் நடத்திய அதிமுக-வினரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர். இது குறித்து திமுக-வினர், “போலீஸாரின் லத்தியைப் பிடுங்கி அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள்மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள் என்று கூறினோம். அதிகாரிகள் அதைக் கேட்காமல் எங்களை வெளியேற்றிவிட்டனர். தாக்குதல் நடத்திய அதிமுக-வினர் மீது புகாரளிக்கவிருக்கிறோம்” என்றனர்.