Published:Updated:

`என் மனைவியைக் காணவில்லை சார்..!'- கோவையில் தன் புகாரால் சிக்கிய கணவர், குடும்பம்

கைது
கைது

கடந்த 6-ம் தேதி அந்த இளைஞரின் மனைவி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதையடுத்து, தன் மனைவி காணவில்லை என்று வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு, கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. தன் மனைவியுடன் அந்த இளைஞர் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், அவர்களின் வீட்டின் அருகே தங்கி கட்டட வேலை பார்த்து வந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 23 வயது இளைஞருடன், அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 6-ம் தேதி அந்த இளைஞரின் மனைவி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார்.

சிறுமி
சிறுமி

இதையடுத்து, தன் மனைவி காணவில்லை என்று வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் அந்த இளைஞர் புகாரளித்தார். அப்போது தன் மனைவிக்கு வயது 20 என்று அவர் கூறியிருந்தார். ஆனால், விசாரணையில், காணாமல் போன பெண்ணுக்கு வயது 16 என்பது தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுமி கட்டட வேலை செய்துவந்த இளைஞருடன் திருச்சிக்குச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருச்சிக்கு விரைந்த போலீஸார் சிறுமியை மீட்டனர்.

மேலும், அந்தக் கட்டட தொழிலாளி மீது போக்ஸோ, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதேபோல, சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்த அந்த 28 வயது இளைஞர்

சிறுமி
சிறுமி

மற்றும் அவரின் பெற்றோர், சிறுமியின் தாய் ஆகியோரை போக்ஸோ, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு