Published:Updated:

கோவை: கடன் பிரச்னை; இன்ஸ்டாகிராம் தோழியின் குழந்தையைக் கடத்திய இளைஞர்! - அதிர்ச்சிச் சம்பவம்

இன்ஸ்டாகிராம் பழக்கம் கடன் வரை சென்று குழந்தைக் கடத்தலில் முடிந்துள்ளது.

கோவை: கடன் பிரச்னை; இன்ஸ்டாகிராம் தோழியின் குழந்தையைக் கடத்திய இளைஞர்! - அதிர்ச்சிச் சம்பவம்

இன்ஸ்டாகிராம் பழக்கம் கடன் வரை சென்று குழந்தைக் கடத்தலில் முடிந்துள்ளது.

Published:Updated:

கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 23). தச்சுப் பணி செய்துவரும் சரவணக்குமார், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அதன் மூலம் தருமபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

மோகனாம்பிக்கை திருமணமானவர். குழந்தை, கணவருடன் வசித்துவந்திருக்கிறார். சரவணக்குமார், மோகனாம்பிகை நட்பு தீவிரமாக, கடைசியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையாக வெடித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரவணக்குமாரிடம், மோகனாம்பிகை சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். பணத்தைத் திருப்பித் தருவதாகச் சொன்ன அவர், அதன் மூலம் தனது கணவருக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், இருவருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சரவணக்குமார்
சரவணக்குமார்

ஒருகட்டத்தில், சரவணக்குமார் தருமபுரிக்குச் சென்று மோகனாம்பிகை வீட்டில்வைத்தே பணத்தைக் கேட்டிருக்கிறார். அப்போதும் மோகனாம்பிகை பணம் தர மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மோகனாம்பிகையின் 7 வயது மகனைக் கடத்திக்கொண்டு கோவைக்கு வந்திருக்கிறார். இது ஆரம்பத்தில் மோகனாம்பிகை வீட்டாருக்குத் தெரியவில்லை. நீண்ட நேரமாகியும் மகனைக் காணவில்லை என்பதால், தருமபுரி போலீஸில் புகாரளித்துள்ளனர்.

கைது
கைது
Representational Image

இதையடுத்து கோவை வந்த தருமபுரி போலீஸார், வடவள்ளி போலீஸ் உதவியுடன் சிறுவனை மீட்டனர். மேலும், சரவணக்குமாரை கைதுசெய்து, விசாரணைக்காக அவரை தருமபுரிக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனைக் கடத்த பயன்படுத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism