Published:Updated:

``இனி நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள்..." - கோவை மேயர் கணவரின் ஆடியோவும் விளக்கமும்!

ஆடியோவும் விளக்கமும்!

``இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம்" என கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் பேசும் செல்போன் ஆடியோ வைரலாகிவருகிறது.

``இனி நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள்..." - கோவை மேயர் கணவரின் ஆடியோவும் விளக்கமும்!

``இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம்" என கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் பேசும் செல்போன் ஆடியோ வைரலாகிவருகிறது.

Published:Updated:
ஆடியோவும் விளக்கமும்!

உள்ளாட்சிப் பதவிகளிலுள்ள பெண்களின் கணவர்களின் ஆதிக்கம் குறித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுவருகிறது.

கோவை மேயர் கல்பனா
கோவை மேயர் கல்பனா

அமைச்சர்கள் வருகை, ஆய்வுக் கூட்டம் என ஆனந்தகுமார் நிழல் மேயராக வலம்வருவதாக அதிகாரிகளும், தி.மு.க மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் ஆனந்த் தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சந்தைக் கடை வசூல் தொடர்பாக செல்போன் உரையாடலில் குமார், சம்பத் ஆகிய இருவர் பேசுகின்றனர். பிறகு அந்த உரையாடலில் இணையும் ஆனந்த், சம்பத் என்பவரிடம்,

செல்போன் உரையாடல்
செல்போன் உரையாடல்

``அடுத்த வாரத்திலிருந்து நம்ம ஆட்கள் சந்தைக் கடையில் வசூல் செய்துகொள்வார்கள்” என்று சொல்கிறார். அதற்கு எதிரில் பேசுபவர், “எங்களுக்குப் பிரச்னை இல்லை. நீங்கள் கோயில் கமிட்டியில் பேசிக்கொள்ளுங்கள்” என்கிறார்.

அதற்கு ஆனந்த், “கோயில் கமிட்டியில் நாங்கள் பேசிக்கிறோம். நீங்கள் வசூல் பண்ண வேண்டாம்” என்று சொல்கிறார். இதையடுத்து, மேயரின் கணவர் “நான்தான் வசூலில் ஈடுபடுவேன்” என மிரட்டுவதாக அந்த ஆடியோ முடிகிறது. இது குறித்து ஆனந்த்குமாரிடம் விளக்கம் கேட்டோம்.

மேயர் கல்பனாவுடன் கணவர் ஆனந்த்குமார்
மேயர் கல்பனாவுடன் கணவர் ஆனந்த்குமார்

“கோயில் பெயரைச் சொல்லி வசூலில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதைக் கோயிலிலும் சரியாகக் கட்டுவதில்லை எனச் சிலர் புகார் கூறினர். சம்பத் என்பவர்தான் வசூலில் ஈடுபடுவதாகச் சொன்னார்கள். அதனால் அவரிடம் பேசினோம்.

நான் அதே ஊரைச் சேர்ந்தவன். அந்த அடிப்படையில்தான் நம் ஆட்கள் என்று கூறினேன். அதாவது கோயில்காரர்கள் வசூல் செய்துகொள்ளட்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். எங்கள் சொந்தப் பகுதி என்பதால், ஏதாவது தீர்வு கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் பேசினேன்.

என் மனைவி மேயராக இருப்பதால், அதைச் சிலர் அரசியல் காரணத்துக்காகத் தவறாகப் பரப்புகின்றனர். இதுவரை நான் எதிலும் தலையிட்டது இல்லை. இனிமேலும் தலையிடப்போவதில்லை” என்றார்.