Published:Updated:

கோவை: நகை காணவில்லை எனப் புகாரளித்த பெண் தற்கொலை; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

தற்கொலை
தற்கொலை ( Representational image )

அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, `அழகு நிலையத்துக்கு வந்த மூன்று நபர்கள், என் கை, கால், வாயைத் துணியால் கட்டி 19 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றுவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). அழகுக்கலை நிபுணராக இருந்துவந்தார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, பணிக்குச் சென்ற மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மகேஸ்வரியின் கணவர் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மகேஸ்வரி மயக்கநிலையில் இருந்திருக்கிறார்.

கோவை
கோவை
கோவை: கல்லூரி மாணவி தற்கொலை; பணம் கேட்டு மிரட்டிய இளைஞர், தாய் கைது! - அதிர்ச்சிப் பின்னணி

அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அழகு நிலையத்துக்கு வந்த மூன்று நபர்கள், என் கை, கால், வாயைத் துணியால் கட்டி 19 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றுவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கணவன், மனைவி இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையில், மகேஸ்வரி தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். பாலியல் வன்கொடுமை காரணமாக மகேஸ்வரி தூக்கு மாட்டித் தற்கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

விசாரணை
விசாரணை

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், கடையில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்திவந்தனர்.

இந்த வழக்கில் முத்துப்பாண்டி என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அதன் பிறகு வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து முத்துப்பாண்டி போலீஸில் கூறியுள்ள வாக்குமூலத்தில், ``எனக்குச் சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தமாகச் சென்னையில் தங்கியிருந்தேன். எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்தேன்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

முகநூல் மூலமாக எனக்கும் மகேஸ்வரிக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவிநாசியிலுள்ள ஒரு மில்லில் மகேஸ்வரி எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். எங்களுடைய நட்பு காதலாக மாறியது.

இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்தோம். அதற்காக, கடையில் அவரை கட்டிப் போட்டு, நகையைத் திருடி பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகம் போட திட்டமிட்டோம். திட்டமிட்டபடி நான் நகையை எடுத்துச் சென்றுவிட்டேன்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

சிறிது காலம் கழித்து அந்த நகையை வைத்து வாழ்வதுதான் எங்கள் திட்டம். இரவு மகேஸ்வரியின் கணவர் கடைக்கு வந்து பார்த்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தன்னை வன்கொடுமை செய்து நகையை எடுத்துச் சென்றுவிட்டதாக மகேஸ்வரி கணவரிடம் கூறியுள்ளார்.

அன்றைய தினம் இரவுகூட மகேஸ்வரியும் நானும் பேசிக்கொண்டுதான் இருந்தோம். ``போலீஸ் என்றெல்லாம் சென்றால் மானம் போய்விடும். என் பேச்சை கணவர் மீற மாட்டார்" எனச் சொன்னார். ஆனால், தவறு செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொல்லி கணவர் இவரை வற்புறுத்தி அழைத்துச் சென்று புகாரளித்துவிட்டார்.

விசாரணை
விசாரணை

போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததால் மகேஸ்வரி இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார். எங்கள் நாடகம் வெளிவந்துவிட்டதால் இப்படியாகிவிட்டது’’ என்று கூறியுள்ளார்.

இறப்பதற்கு முன்புகூட முத்துப்பாண்டியும் மகேஸ்வரியும் பேசியுள்ளனர். இதையடுத்து, அவரது செல்போன் எண்ணை ட்ராக் செய்து ஊட்டியில் தங்கியிருந்த முத்துப்பாண்டியை போலீஸார் கைதுசெய்து கோவை அழைத்து வந்தனர்.

கைது
கைது

அவரிடமிருந்து 19 பவுன் நகையை மீட்டுள்ளனர். மகேஸ்வரியைத் தற்கொலைக்குத் தூண்டியதற்காக முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு