Published:Updated:

மாரி பட வசன ஸ்டேட்டஸால் கடுப்பான கோவை எஸ்.ஐ! - வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

கோவையில் ஒரு போலீஸ் எஸ்.ஐ, ஒருவரை மிரட்டும் தொனியில் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது...

மாரி பட வசன ஸ்டேட்டஸால் கடுப்பான கோவை எஸ்.ஐ! - வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

கோவையில் ஒரு போலீஸ் எஸ்.ஐ, ஒருவரை மிரட்டும் தொனியில் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது...

Published:Updated:

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (27). நவீன் தன் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட, 7 நண்பர்களுடன் இரவு ஓர் கோயில் முன்பு கூடியதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த போத்தனூர் காவல்நிலைய எஸ்.ஐ சையத் அலி தலைமையிலான போலீஸார், அவர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு சொல்லியுள்ளதாக தெரிகிறது.

கோவை
கோவை

அதற்கு அந்த இளைஞர்கள், “எங்கள் அனைவரது வீடுகளும் இங்குதான் உள்ளன. சிறிது நேரத்தில் கிளம்பிவிடுகிறோம்.” என்று பதில் அளித்துள்ளனர். போலீஸார் அதை ஏற்காமல் அவர்களை கூட்டத்தை கலைத்துள்ளனராம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் கடுப்பான நவீன், மாரி படத்தில், நடிகர் தனுஷ், “போய் அந்த போலீஸ்காரன் கிட்ட சொல்லு. மாரி இங்கதான் இருப்பான். இந்த ஏரியா அவன் கன்ட்ரோல்ல இருக்கலாம். ஆனா.. மாரி எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் .” என்று பேசுவதை வாட்ஸப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். இதை யாரோ ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எஸ்.ஐ சையது அலிக்கு அனுப்பிய்தாக சொல்லப்படுகிறது.

போலீஸ்
போலீஸ்

இதனால் கடுப்பான போலீஸ் எஸ்.ஐ சையது, “ஸ்டேட்டசா போடற.. ஸ்டேசன் வா. உன்னைய என்ன பண்றேன்னு பார்.” என்று தகாத வார்த்தைகளில் மிரட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ தான் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் போலீஸ் மிரட்டியதால், மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படும் நவீன், சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நவீன் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருவதாகவும்,

கோவை
கோவை

இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் எதுவும் பதியப்படாத நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்க எஸ்.ஐ சையது அலியை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் அவர் விளக்கம் தரும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்குப்பினர் பதிய தயாராக இருக்கிறோம்.