Published:Updated:

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி - ஆட்சியரின் அலர்ட்டால் தப்பிய அதிகாரிகள்

அரியலூர் கலெக்டர்

அமேசானிலிருந்து வருவதுபோலவே உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதை ’இன்புட்’ செய்தால் போதும், அடுத்த விநாடியே உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள அத்தனை பணமும் அந்த மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடும்.

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி - ஆட்சியரின் அலர்ட்டால் தப்பிய அதிகாரிகள்

அமேசானிலிருந்து வருவதுபோலவே உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதை ’இன்புட்’ செய்தால் போதும், அடுத்த விநாடியே உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள அத்தனை பணமும் அந்த மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடும்.

Published:Updated:
அரியலூர் கலெக்டர்

பணத்துக்காக ’ஹவுஸ் பிரேக்கிங், பீரோ புல்லிங்’ போன்ற வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் குறைந்தாலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் வங்கிப் பணத்தைக் கொள்ளையடிப்பது அதிகரித்துவருகிறது. இதில், பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியரையே அது போன்ற டிஜிட்டல் கொள்ளையர்கள் டார்கெட் செய்த சம்பவமும், அதை அவர் சாதுர்யமாகக் கையாண்டு அரசு அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றியவிதமும் மாவட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

அரியலூர்
அரியலூர்

’என்னதான் நடந்தது? அரசு அதிகாரிகளின் வங்கிப் பணம் கொள்ளை போகாமல் மாவட்ட ஆட்சியர் தடுத்தது எப்படி?’ என்பதை அறிவதற்காக அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``18.05.2022 அன்று மதியம் சுமார் 1:50 மணியளவில் சேம்பரில் நான் இருக்கும்போது, என்னோட பர்சனல் கிளர்க் சவுந்தரராஜனின் வாட்ஸ் அப் நம்பருக்கு, ‘என்ன ராஜா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’ எனக் கேட்டு ஆங்கிலத்தில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. புது நம்பரிலிருந்து அந்த மெசேஜ் வந்த காரணத்தால், ‘நீங்கள் யார்? என கேட்டிருக்கிறார் ராஜா. அதற்கு, ’என்னோட டி.பி-யை (Display Picture) நீங்க செக் பண்ணலையா?’ என பதில் வந்திருக்கிறது.

அரியலூர் கலெக்டர்
அரியலூர் கலெக்டர்

அப்போதுதான் அதில் என்னுடைய புகைப்படம் இருப்பதை பார்த்திருக்கிறார் ராஜா. உடனே அது நானாகத்தான் இருக்க வேண்டும் என நம்பிய அவர், அவசர அவசரமாக கதவைத் திறந்து, `சாரி மேடம். நீங்க கூப்பிட்டதை கவனிக்கலை’ என்றார். குழம்பிப் போன நான், என்னுடைய புரோஃபைல் பிக்சரோடு அவருக்கு வந்த அந்த மெசேஜை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ‘எனக்கு கொஞ்சம் ‘கிஃப்ட் கூப்பன்’ வாங்கணும். நான் வேலையா இருக்கிறதால நீங்களே 10 கூப்பன் வாங்கிடுங்க. ஒரு கூப்பனோட ரேட் பத்தாயிரம்’ என்ற மெசேஜும் அதோடு ஒரு லிங்க்கும் வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே, என்னோட பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி ஏதோவொரு ஏமாற்று வேலை நடக்கப்போகிறது என சுதாரித்துக்கொண்டச் நான், இதுப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, குறிப்பிட்ட அந்த நம்பரில் இருந்து, ‘கூப்பனை சீக்கிரம் வாங்கி எனக்கு அனுப்புங்க. அதை நான் சிலருக்குத் தரவேண்டியதிருக்கு. அதுக்கான பணத்தை இன்னைக்கே உங்களுக்கு கொடுத்திடுறேன்’ என மாவட்ட கலெக்டரான நான் சொல்வதுபோலவே அவசரப்படுத்தி சில மெசேஜ்கள் வந்தன.

அவசரப்படுத்தி சில மெசேஜ்கள்
அவசரப்படுத்தி சில மெசேஜ்கள்

உடனே அந்த நம்பருக்கு கான்டாக்ட் பண்ணிப் பார்த்தபோது, யாரோ ஒருவர் ஹிந்தியில் பேசவே அதிர்ச்சியடைந்த நான், ‘இது சம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள வேறு சில அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உஷார் படுத்தியதோடு, மாவட்ட எஸ்.பி-க்கும் தகவல் தந்தேன். அப்போதுதான், இதேபோல, பத்தாயிரம் மதிப்புள்ள 10 அமேசான் கிஃப்ட் கூப்பனை உடனே பர்ச்சேஸ் செய்து எனக்கு அனுப்புமாறு மாவட்ட திட்ட இயக்குநருக்கும், என்னுடைய நேரடி உதவியாளருக்கும் அதே நம்பரிலிருந்து மெசேஜ் வந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது.

இதற்கிடையே என்னுடைய அலுவலகத்துக்கு விரைந்து வந்த இரண்டு சைபர் க்ரைம் போலீஸார் குறிப்பிட்ட அந்த நம்பரிலிருந்து வந்த மெசேஜ்களை ஆய்வு செய்துகொண்டிருக்கும்போதே, மறுபடியும் மறுபடியும் அந்த கூப்பன்களை பர்ச்சேஸ் செய்யுமாறு அவசரப்படுத்தி வாட்ஸ்அப் வந்துகொண்டிருந்தது. உடனே மாவட்டத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும்கூட எனது பெயர், புகைப்படத்தோடு 7061656848 என்ற நம்பரிலிருந்து வரும் தகவல்களை நம்பி யாரும், எதையும் பர்ச்சேஸ் பண்ண வேண்டாம்.

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி

உங்கள் பணம் பறிபோய்விடும்’ எனத் தகவல் தெரிவித்ததோடு எனது வாட்ஸ்அப்பிலும் அதை ஸ்டேடஸாகவே வைத்துவிட்டேன். தற்போது, சைபர் க்ரைம் போலீஸார் அந்த மோசடிக் கும்பல் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறார்கள். எந்த ஓர் உயர் அதிகாரியிடமிருந்தாவது `அதை வாங்கிட்டு வாங்க, இதை வாங்கிட்டுவாங்க’ என்று ஒரு மெசேஜ் வந்தால் கண்டிப்பாக அந்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டு செயல்படுங்கள். இது காலத்தின் கட்டாயம்” என்றார் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.

மாவட்ட ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி மாவட்ட உயரதிகாரிகளிடமே மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லாவிடம் பேசினோம். ``குறிப்பிட்ட அந்த மோசடி நபரின் எண் பீகாரில் இருப்பதாக எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரியலூர் எஸ்.பி ஃபெரோஸ்கான் அப்துல்லா
அரியலூர் எஸ்.பி ஃபெரோஸ்கான் அப்துல்லா

அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் கூப்பன்களை வாங்குமாறு அவர்கள் கூறினாலும், சாஃப்ட்வேர் மூலமாக அமேசான் என்ற பெயரில் போலியாக லிங்க் உருவாக்கி வைத்திருப்பார்கள். அதை யார் க்ளிக் செய்தாலும், அமேசானில் இருந்து வருவதுபோலவே உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும்.

அதை ’இன்புட்’ செய்தால் போதும், அடுத்த விநாடியே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அத்தனை பணமும் அந்த மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடும். அதை அவர்கள் உடனடியாக எடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் இது போன்ற வொயிட் காலர் கிரிமினல்கள் இன்டர்நெட் மொபைல் மூலம் மட்டுமே அதிகம் தொடர்புகொள்வதால்,

சுந்தர் ராஜனுக்கு அனுப்பிய மெசேஜ்
சுந்தர் ராஜனுக்கு அனுப்பிய மெசேஜ்

அவர்களின் உண்மையான இருப்பிடம் பற்றித் தெரிந்துகொள்வதும், அவர்களிடமிருந்து மீட்பதும் மிகவும் சிரமமான வேலை. நல்லவேளையாக மாவட்ட ஆட்சியர் சுதாரித்த காரணத்தால் மிகப்பெரிய அளவில் நடக்கவிருந்த ஒரு மோசடி தடுக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் அனைவருமே இதுபோல வரும் மெசேஜ்களுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. எக்காரணம் கொண்டும் அவர்களிடமிருந்து வரும் லிங்க்களை ’க்ளிக்’ செய்துவிடக் கூடாது” என்றார் எஸ்.பி ஃபெரோஸ்கான் அப்துல்லா.

அரியலூர் கலெக்டர்
அரியலூர் கலெக்டர்

`அசத்தல் அரியலூர்' திட்டம் உருவாக்கி, பொதுமக்களின் குறைகளைக் களையும் முயற்சிகளை எடுத்துவரும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தனது அதிகாரிகளையும் மோசடி வலையில் சிக்காமல் பாதுகாத்த விஷயம் பேசுபொருளாகிவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism