Published:Updated:

``டீச்சர் போஸ்ட்டிங் போட்டுத் தர்றேன்” - ரூ.3 கோடி பண மோசடிப் புகார்; திருச்சி பிஷப் தலைமறைவு?

டி.இ.எல்.சி திருச்சபை

‘தலைமறைவாக இருக்கும் பிஷப் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தபோதிலும், அவரின் நெட்வொர்க்கைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம்’ என்கின்றனர் விஷயமறிந்த போலீஸார்.

``டீச்சர் போஸ்ட்டிங் போட்டுத் தர்றேன்” - ரூ.3 கோடி பண மோசடிப் புகார்; திருச்சி பிஷப் தலைமறைவு?

‘தலைமறைவாக இருக்கும் பிஷப் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தபோதிலும், அவரின் நெட்வொர்க்கைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம்’ என்கின்றனர் விஷயமறிந்த போலீஸார்.

Published:Updated:
டி.இ.எல்.சி திருச்சபை

திருச்சி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் (டி.இ.எல்.சி) பிஷப் ஆக இருப்பவர் மார்ட்டின். இவர்மீது மதுரை கிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனைச் சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ``2009-ம் ஆண்டு திருச்சி டி.இ.எல்.சி பிஷப் மார்ட்டின், `திருச்சபை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. திருச்சபையின் செலவினங்களுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றார். அதற்குப் பிரதிபலனாக திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத் தருவதாகச் சொன்னார். அதை நம்பி நானும் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கி, ஒன்றரைக் கோடி ரூபாயை பிஷப் மார்ட்டினிடம் அவரின் அலுவலகத்தில் வைத்துக் கொடுத்தேன்.

டி.இ.எல்.சி திருச்சபை
டி.இ.எல்.சி திருச்சபை

அப்போது பிஷப் மார்ட்டினின் மனைவி ஜீவஜோதி, சகோதரர் ஹென்றி ராஜசேகர் ஆகியோரும் ஆசிரியர் பணி தொடர்பாக எனக்கு உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி ஆசிரியர் பணி நியமனம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே 2013-ம் ஆண்டு, `இன்னும் ஒன்றரைக் கோடி ரூபாய் தேவைப்படுகிறது’ என பிஷப் மார்ட்டின் என்னிடம் கேட்டார். ஏற்பாடு செய்து கொடுத்தேன். இருந்தபோதிலும் கடைசிவரை அவர்கள் சொன்னபடி ஆசிரியர் பணியைப் பெற்றுத் தரவில்லை. என்னை ஏமாற்றி 3 கோடி ரூபாயை மோசடி செய்து ஏமாற்றிவிட்டனர். எனவே பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து 3 கோடி ரூபாயைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மனுவை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதையடுத்து விசாரணையில் 3 கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானதையடுத்து, பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவுசெய்து போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ``தலைமறைவாக இருக்கும் பிஷப் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தபோதிலும், அவரின் நெட்வொர்க்கை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் விஷயமறிந்த போலீஸார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism