Published:Updated:

கோவையில் ஹெலிகாப்டர் விபத்தைக் கொண்டாடியதாக அவதூறு! - கேரள ஊடகம் மீது போலீஸில் புகார்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து
News
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை, கோவை இளைஞர்கள் கொண்டாடியதாகத் தவறான தகவலை வெளியிட்ட கேரள ஊடகம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிபின் ராவத் மரணத்தை, கோவை பீளமேடு பகுதியிலுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் கொண்டாடுகின்றனர் என்று சமூக வலைதளங்களில் ஓர் வீடியோ உலாவிக்கொண்டிருந்தது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த வீடியோவில், இளைஞர்கள் டி.ஜே ஆடுவதுபோல இருந்தது. இதை கேரளாவிலுள்ள ஓர் இணையதள ஊடகம் செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.

ஆனால், அந்த வீடியோ ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கோவை நேரு கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``சமூக வலைதளங்களில் எங்கள் கல்லூரியின் பெயர் மற்றும் மாணவர்கள் குறித்துத் தவறான தகவல் பரப்பப்பட்டுவருகிறது.

அஞ்சலி
அஞ்சலி

அது எங்கள் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்க நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ. அதுவும், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்கு, டிசம்பர் 9-ம் தேதி எங்கள் கல்லூரியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தின், நிறுவனர் தாஸ் விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அப்படி இருக்கும்போது, இது போன்ற தவறான தகவல்கள் எங்களைக் காயப்படுத்துகிறது.

அஞ்சலி
அஞ்சலி

தவறான தகவல்களை பரப்புவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். மேலும், அந்தக் கேரள இணையதள ஊடகம் மீது, கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.