Published:Updated:

சேலம்: சாக்கடைமீது சாலை; தட்டிக்கேட்ட சுயேச்சை கவுன்சிலர் மீது திமுக-வினர் தாக்குதல்?

போலீஸார் விசாரணை

சாலை அமைக்க வந்த அதிகாரிகளிடம் சுயேச்சை கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தி.மு.க நிர்வாகிகள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சேலம்: சாக்கடைமீது சாலை; தட்டிக்கேட்ட சுயேச்சை கவுன்சிலர் மீது திமுக-வினர் தாக்குதல்?

சாலை அமைக்க வந்த அதிகாரிகளிடம் சுயேச்சை கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தி.மு.க நிர்வாகிகள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
போலீஸார் விசாரணை

சேலம் மாநகராட்சியின் 31-வது வார்டு கவுன்சிலராக இருந்துவருபவர் சையத் மூசா. இவர்மீது நேற்று முன்தினம் தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சையத் மூசா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ``சேலம் மாநகர 31-வது வார்டு கவுன்சிலருக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட என்னை அந்தப் பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நிலையில் நீண்டகாலமாக எனது வார்டுக்கு உட்பட்ட ஹபீப் தெரு, குண்டு போடும் தெருப் பகுதிகளில் சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னை இருந்துவருகிறது. இது தொடர்பாக நான் கவுன்சிலராகப் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளிடம் தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இதற்கிடையில் சாலை ஒப்பந்ததாரர் எனது வார்டில் எந்தவித அறிவிப்புமின்றி பணியாட்களுடன் சாலை போட வந்தார். அவரிடம் நான் `முதலில் சாக்கடைப் பிரச்னை, குடிநீர்ப் பிரச்னையை சரி செய்யுங்க. அதுக்குப் பிறகு ரோடு போடலாம். அதே மாதிரி, ஒருதடவை போட்ட ரோடு மேலயே மறுபடியும் எதுக்குப் போடுறீங்க... தேவையில்லாத செலவு எதுக்கு'னு அவங்களை சாலை போடவிடாமல் தடுத்து நிறுத்தினேன். உடனே அந்த சாலை ஒப்பந்தக்காரர், `சம்பந்தப்பட்ட அதிகாரி சொல்லித்தான் ரோடு போடுறோம். நீங்க அவங்ககிட்ட பேசிக்குங்க'னு சொன்னாரு. அதுவரைக்கும் சாலை போடக் கூடாதுனு நான் சொன்னேன். இதனால அந்த ஒப்பந்தகாரர் தி.மு.க வட்டச் செயலாளர் இஸ்மாயில் என்பவரிடம் தகவல் கொடுத்து, என்மீது தாக்குதல் நடத்தினார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக 31-வது வார்டு கவுன்சிலர் சையத் மூசாவிடம் பேசினோம். ``என்னோட வார்டுல ரோடு போடுறவங்க என்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லலை. ஏற்கெனவே நான் வார்டில் உள்ள பிரச்னை குறித்து பல்வேறு மனுக்களை மாநகராட்சி கமிஷனரிடம் கொடுத்திருக்கேன். அதெல்லாம் செய்யாம இப்போ ரோடு போட வந்திருக்காங்க. ரோடு போடுறவங்க சாக்கடையை எடுத்து மட்டம் பண்ணிட்டு, அதுல தார் ரோடு போடப் போறாங்க. இதெல்லாம் அநியாயம் இல்லையா... என்னை ஓட்டுப் போட்டு ஜெயிக்கவெச்ச மக்கள் நாளைக்கு என்னைத்தானே கேள்வி கேட்பாங்க... அதுவுமில்லாம இப்ப ரோடு போடுறவங்க அடுத்தது சாக்கடையை சரிபண்ணணும், குடிநீர்க் குழாய் போடணும்னு ரோட்டைத் தோண்டிப் போட்டுடுவாங்க. இதனால யாரோட பணம் வீணாகுது... அதுக்காக முதல்ல சாக்கடை, குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யச் சொல்லி என்னோட வார்டு மக்களோட சாலையில அமர்ந்து போராட்டம் பண்ணினேன். அதுக்கு சில அதிகாரிகள் தூண்டுதலின் பேரில் தி.மு.க வட்டச் செயலாளர் இஸ்மாயில் அடியாட்களை வைத்து என்னைத் தாக்கினார்" என்றார்.

போலீஸார் சையத் மூசா புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism