Published:Updated:

நைட்டியில் சிகிச்சை, கேட்டவர்கள்மீது வன்கொடுமை வழக்கு..? தற்கொலைக்கு முயன்ற 4 பேர் - நடந்தது என்ன?

ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாதது குறித்தும், நைட்டியுடன் சிகிச்சை அளிக்க வந்தது குறித்தும் ஆனந்தும், அவருடன் இருந்தவர்களும் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

நைட்டியில் சிகிச்சை, கேட்டவர்கள்மீது வன்கொடுமை வழக்கு..? தற்கொலைக்கு முயன்ற 4 பேர் - நடந்தது என்ன?

மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாதது குறித்தும், நைட்டியுடன் சிகிச்சை அளிக்க வந்தது குறித்தும் ஆனந்தும், அவருடன் இருந்தவர்களும் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலிருக்கும் எமரால்டு, சுரேந்தர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான ஆனந்த். இவரின் சகோதரி பிரியாவுக்கு கடந்த 11-ம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் ஆனந்த், தன் சகோதரியை அழைத்துக்கொண்டு இரவு 10:30 மணியளவில் அருகிலுள்ள இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார். அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் என யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதையடுத்து, செவிலியர்களுக்கு மருத்துவமனை ஊழியர் தகவல் தெரிவித்து வரச் செய்திருக்கிறார்.

ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

செவிலியர்கள் ஏஞ்சலின் பிரவீனா, பேபி ஆகிய இருவர் சிகிச்சை அளிக்க வந்திருக்கின்றனர். செவிலியர் ஒருவர், சீருடை அணியாமல் நைட்டியில் வந்து சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாதது குறித்தும், நைட்டியுடன் சிகிச்சை அளிக்க வந்தது குறித்தும் ஆனந்தும், அவருடன் இருந்தவர்களும் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் செவிலியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் போலீஸை அழைத்திருக்கின்றனர். போலீஸார் பிரியாவின் உறவினர்களுடன் சமாதானம் பேசி அவர்களை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ``பணியில் இருந்த செவிலியரை ஆபாச வார்த்தைகளில் நான்கு பேர் திட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செவிலியர் ஏஞ்சலின் பிரவீனா எமரால்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஆனந்த் உட்பட நான்கு பேர்மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இதையறிந்த நான்கு பேரும் மனஉளைச்சலில் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். தற்போது அவர்கள் ஊட்டியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

செவிலியர் ஏஞ்சலின் பிரவீனா எமரால்டு காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரில், ``கடந்த 11-ம் தேதியன்று இரவுப் பணியில் இருந்தேன். இரவு 10:30 மணிக்கு மருத்துவமனை அருகிலுள்ள எனது குடியிருப்புக்குச் சாப்பிடச் சென்றபோது எமரால்டு சுரேந்தர் நகரைச் சேர்ந்த சிலர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வந்தனர். மருத்துவமனை ஊழியர் வெள்ளியங்கிரி ராஜா என்பவர் தகவல் தெரிவித்ததால் உடனடியாக வந்து உடல்நிலை பாதித்த பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தேன். அப்போது, `நாங்கள் வரும்போது ஏன் மருத்துவமனையில் நீங்கள் இல்லை?' எனக் கூறி ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டினார்கள். அதையடுத்து ஓய்விலிருந்த மற்றொரு செவிலியர் பேபி ஓடி வந்து `ஏன் தகராறு செய்கிறீர்கள்?’ எனக் கேட்டபோது, அவரையும் திட்டினர். மருத்துவமனையில் எங்களைப் பணி செய்ய விடாமல் செய்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பிரியாவின் உறவினர்கள், ``இந்த சுகாதார நிலையத்துக்கு எப்போது நோயாளிகள் வந்தாலும் முறையாகச் சிகிச்சை அளிப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள இருப்பதே இல்லை. அது குறித்துத்தான் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், செவிலியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. அவர்களை ஆபாசமாகவோ, தகாத வார்த்தைகளாலோ திட்டவில்லை. செவிலியர்களின் தவற்றை மறைப்பதற்காக எங்கள்மீது பொய்ப் புகார் அளித்திருக்கின்றனர்.

ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அங்கு நடந்த அனைத்தையும் நாங்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என எங்களுடைய போனையும் தட்டிவிட்டு, சேதப்படுத்தினார்கள். காவல்துறையினர் எங்களை முறையாக விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக ஆனந்த், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் எட்வர்டு, ஆரோக்கியநாதன், கரண் பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். அதனால், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism