Published:Updated:

கொலை வழக்கு விசாரணை; விஷம் குடித்த இளைஞர் பலி - ஆய்வாளர் மிரட்டியதாக குடும்பத்தினர் புகார்!

மரணம்

இரு சக்கர வாகனத்தில் மாரிசேகர் சென்றபோது விபத்தில் சிக்கியதால் காயமடைந்து உயிரிழந்ததாக விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மாரிசேகரை சிலர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள்.

கொலை வழக்கு விசாரணை; விஷம் குடித்த இளைஞர் பலி - ஆய்வாளர் மிரட்டியதாக குடும்பத்தினர் புகார்!

இரு சக்கர வாகனத்தில் மாரிசேகர் சென்றபோது விபத்தில் சிக்கியதால் காயமடைந்து உயிரிழந்ததாக விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மாரிசேகரை சிலர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள்.

Published:Updated:
மரணம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரிசேகர் (வயது 22). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியார் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 4-ம் தேதி இரவு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், சர்ச்சைக்குரிய விதத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

சாலையில் மாரிசேகர் கிடப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் அவர் அண்ணன் கண்ணதாசன் விரைந்து சென்று அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் குடும்பத்தைச் சேர்ந்த பனிதாசன் என்பவர் விஷம் அருந்தியது சர்ச்சையாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரு சக்கர வாகனத்தில் மாரிசேகர் சென்றபோது விபத்தில் சிக்கியதால் காயமடைந்து உயிரிழந்ததாக விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மாரிசேகரை சிலர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள். தேர்தலில் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவரை வெற்றி பெற வைத்ததால் திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக புகார் தெரிவித்தனர்.

கொலை என உறவினர்கள் சந்தேகம்
கொலை என உறவினர்கள் சந்தேகம்

மாரிசேகர் குடும்பத்தினரும் உறவினர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, உடலை வாங்க மறுத்து போராட்டம் என இறங்கியதால் விக்கிரமசிங்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதா லட்சுமி மீண்டும் விசாரணையைத் தொடங்கினார். விசாரணைக்காக மாரிசேகர் குடும்பத்தைச் சேர்ந்த பனிதாசன் என்பவரை அழைத்த இன்ஸ்பெக்டர் சீதா லட்சுமி அவரை அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஸ்பெக்டர் சீதா லட்சுமி அவதூறாகப் பேசியதாகக் கூறி பனிதாசன் என்பவர் விஷம் அருந்தினார். விஷம் குடித்த பனிதாசன் உறவினர் ஒருவரிடம் போனில் பேசுகையில், பெண் இன்ஸ்பெக்டர் சீதா லட்சுமி தன்னை அவமானப்படுத்தியதால் விஷம் குடித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். விஷம் அருந்திய நிலையில் அவர் பேசும் பேச்சு வைரலாக பரவியது.

பனிதாசன்
பனிதாசன்

இந்த நிலையில், விஷம் அருந்திய பனிதாசன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் அவர் குடும்பத்தினரும் ஏற்கெனவே கொலையான மாரிசேகர் குடும்பத்தினரும் சோகம் அடைந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சீதா லட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism