Published:Updated:

குற்றவியல் நடைமுறை மசோதா நிறைவேற்றம்: சாதகமா, பாதகமா? - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி என்ன?

குற்றவியல் நடைமுறை மசோதா

குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா, அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், தனி மனித உரிமைகளைப் பறிக்கக்கூடியது என்றும் எதிர்க்கட்சியினர், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குற்றவியல் நடைமுறை மசோதா நிறைவேற்றம்: சாதகமா, பாதகமா? - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி என்ன?

குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா, அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், தனி மனித உரிமைகளைப் பறிக்கக்கூடியது என்றும் எதிர்க்கட்சியினர், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:
குற்றவியல் நடைமுறை மசோதா

எதிக்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்திருக்கும் `குற்றவியல் நடைமுறை மசோதா-2022' நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்ட மசோதா, இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், தனி மனித உரிமைகளைப் பறிக்கக்கூடியது என்றும் எதிர்க்கட்சியினர், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏன் இத்தனை எதிர்ப்புகள், இந்த சட்டத்தில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? இந்த சட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன?

குற்றம் கைது
குற்றம் கைது
சித்திரிப்புப் படம்

குற்றவியல் நடைமுறை மசோதா - 1920 பின்னணி:

குற்றவியல் நடைமுறை மசோதா, 1920-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு தண்டனை பெற்றவர்கள் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நீதிமன்றத்தால் விசாரணைக்கான அடையாளங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டவர்கள், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நன்னடத்தைகான பிணை பெற்றவர்கள் உள்ளிட்டோரின் அடையாள மாதிரிகளை சேகரிக்க முடியும். குறிப்பாக, குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்களின் `கைரேகைகள், கால் ரேகைகள்' ஆகிய அடையாள மாதிரிகள் மட்டும் சேகரிக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதா 2022:

இந்த நிலையில், 102 ஆண்டுகளாக இருந்ததுவந்த இந்த சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து, புதிய குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதா-2022 (Criminal Procedure (Identification) Bill - 2022)-ஐ மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது.

மரபணு
மரபணு

இந்த சட்ட மசோதாவின் படி, எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்படுபவர்களின் கை ரேகை, கால் ரேகை மட்டுமல்லாது அவர்களின் உயிரியல் மாதிரிகளும் சேகரிக்கப்படும். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏ. சோதனைக்காக ரத்தம், விந்து, தலைமுடி, சளி, எச்சில் என அனைத்துவிதமான மாதிரிகளும் சேகரிப்பதில் அடங்கும். மேலும், கருவிழி, விழித்திரை ஸ்கேன், புகைப்படங்கள், கையெழுத்து மற்றும் பழக்க வழக்கங்கள் கூட பதிவு செய்யப்படும். இதற்கான முழு அதிகாரம் மற்றும் அனுமதியை காவல்துறை, புலனாய்வு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

கைரேகை பகுப்பாய்வு
கைரேகை பகுப்பாய்வு

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள், தேசிய குற்ற ஆவணக்காப்பகத்திடம் (NCRB) ஒப்படைக்கப்பட்டு 75 ஆண்டுகள் மின்னணு வடிவத்தில் பாதுகாக்கப்படும் என்று இந்த சட்டவரைவு கூறுகிறது. மேலும், இந்த சட்ட முன்மொழிவின் கீழ், தரவுகளை தர மறுப்பது, எதிர்க்கலகம் செய்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மசோதா அறிமுகம்:

இந்த சட்ட மசோதாவை கடந்த மார்ச் 28-ம் தேதி, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அஜய் மிஸ்ரா, ``குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கூடுதல் அடையாள மாதிரிகளைச் சேகரிக்கும் வகையில் இந்த குற்றவியல் நடைமுறை(அடையாள) மசோதா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், குற்றம் சாட்டப்படுபவர்களின் பயோமெட்ரிக் தகவல்களையும் (Biometric data)சேர்த்து சேகரிக்க முடியும். இந்த அடையாள மாதிரிகளை சேமிப்பதன் மூலம் வழக்கின் குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும்" எனப் பேசினார்.

அஜய் மிஸ்ரா
அஜய் மிஸ்ரா

இந்த சட்ட மசோதா அறிமுகத்தின்போதே, ``புதிய குற்றவியல் நடைமுறை மசோதா, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 20, 21 ஆகியவற்றை மீறும் வகையில் இருப்பதாகவும், மசோதாவில் இடம்பெற்றிருக்கும் சில சொற்கள், குற்றம் சாட்டப்படுவர்களின் தனிமனித உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும்" கூறி எதிர்க்கட்சி எம்.பி-க்களான மணீஷ் திவாரி, அதீர் ரஞ்சன் சௌத்ரி, சௌகதா ராய், என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஆனால், அதை ஏற்கமறுத்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, மசோதாவை அறிமுகப்படுத்துவதற்காக வாக்கெடுப்பை நடத்தினார். மசோதா அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 120 உறுப்பினர்களும், எதிராக 58 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

மக்களவையில் நிறைவேற்றம்:

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி `குற்றவியல் நடைமுறை(அடையாள) மசோதா-2022' குறித்தான விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்றது. இந்த மசோதா தொடர்பாக விளக்கமளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, `` உள்நாட்டு பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பயோமெட்ரிக் தகவல்களைச் (Biometric Details) சேகரிப்பது அவசியமாகிறது. இது, குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கும், அவர்களின் குற்றச்செயல்களை ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் பேருதவியாக இருக்கும். மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவாளிகளின் குற்றங்களை நீதிமன்றங்களில் உறுதிசெய்வதில் பல்வேறு சிக்கல்கள், பின்னடைவுகளை சந்திக்கின்றனர். அடுத்த தலைமுறையினரின் குற்றங்களை, பழைய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முடியாது என்பதால் காலத்துக்கேற்ப புதிய மாற்றங்களுடன் இந்த சட்டமசோதா உருவாக்கப் பட்டிருக்கிறது." என்றார்.

அதைத்தொடர்ந்து, எம்.பி-க்களின் குரல் ஓட்டெடுப்பு மூலம், `குற்றவியல் நடைமுறை(அடையாள) மசோதா-2022' மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அமித்ஷா
அமித்ஷா
ANI

மாநிலங்களவையில் நிறைவேற்றம்:

இந்த நிலையில், கடந்த மார்ச் 6-ம் தேதி இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ``குற்றவாளிகளின் அடையாளங்களை காலல்துறையினர் பெற அனுமதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மசோதாவால் காவல்துறையினருக்கு வழங்கப்படும் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. அரசியல் போராட்டங்களின்போது கைது செய்யப்படுபவர்களின் டி.என்.ஏ மாதிரிகளையும் அவர்கள்பெற வாய்ப்பிருக்கிறது. இது தனிமனித உரிமைக்கு எதிரானது. எனவே, மசோதாவை மேற்கொண்டு ஆய்வுசெய்ய, அதனை தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டும்" என வலியுறுத்தினார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, ``காலனிய ஆட்சியின்போது தேசியவாதிகளை ஒடுக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை, 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது. அதுவும், தங்களை தேசியவாதிகள் என்று கூறிகொள்ளும் இவர்கள் தான், அதைவிடக் கடுமையாக இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்" என காட்டமாக குற்றம்சாட்டினார்.

இந்த கோரிக்கை மற்றும் குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``போராட்டத்தில் கைதாகும் அரசியல் கைதிகளின் அடையாளங்கள் சேகரிக்கப்படாது. இது யாருடைய தனி உரிமையும் மீறாது; அவர்களின் ரகசியங்கள் வெளியாகாது; இந்தியாவில் குற்றவியல் நடைமுறைகள் இதுவரை கடுமையாக பின்பற்றப்படவில்லை; காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்களுக்கு உதவும் நோக்கில் தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது" என பதிலளித்தார்.

அதன்பிறகு, எதிர்க்கட்சியினர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சட்டமாவதற்காக, குடியரசுத் தலைவரின் ஒப்புதல்கேட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

மணீஷ் திவாரி
மணீஷ் திவாரி

எதிர்ப்பு:

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல்வேறு மாநில, தேசியக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒங்கிணைப்பாளர் சீமான், ``ஒன்றிய அரசின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சியினரையும், மனித உரிமை போராளிகளையும், சமூக ஆர்வலர்களையும் சட்டத்தின் மூலம் அடக்கி ஒடுக்கும் வகையிலேயே இப்புதியச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிமக்களின் உயிரியல் தகவல்களைத் திரட்டிப் பாதுகாப்பதன் மூலம், மீண்டும் நவீன குற்றப்பரம்பரையினரை உருவாக்க ஆளும் பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது.

சீமான்
சீமான்

மேலும், ``எந்தவொரு குற்றத்திற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் தனக்கு எதிராக, தானே சாட்சியாக இருக்கக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 20(3) கூறுகிறது. தானாக, முன்வந்து சோதனை மேற்கொண்டாலும், அதைச் சாட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், வழக்கு விசாரணையின்போது மௌனம் கடைப்பிடிப்பதுகூட அடிப்படை உரிமையாகும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இயற்றப்பட்ட 1920-ஆம் வருட குற்றவியல் நடைமுறைச்சட்டம்கூட குற்றவாளியின் அடையாளங்களை மட்டுமே ஆவணப்படுத்த அனுமதி வழங்குகிறது. ஆனால், தற்போதைய சட்டவரைவில் உயிரியல் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரே தமக்கெதிராகச் சாட்சியமளிக்கும் வகையில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது அரசியல் அமைப்பின் அடிப்படைக்கே முற்றிலும் எதிரானது" என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism