Published:Updated:

சிஆர்பிஎஃப் வீரரை சங்கிலியால் கட்டிவைத்த கர்நாடக போலீஸ் - லாக்டெளன் சர்ச்சைகள்

சிஆர்பிஎஃப் வீரர்
சிஆர்பிஎஃப் வீரர்

விடுமுறையில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் சாவந்திடம் காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர்.

கர்நாடகாவில், சிஆர்பிஎஃப் கோப்ரா கமாண்டோ படையைச் சேர்ந்த காவலர் ஒருவரை பெலகாவி போலீஸார் சங்கிலியால் கட்டிவைத்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. சச்சின் சாவந்த் என்ற சிஆர்பிஎஃப் வீரர், விடுமுறை காரணமாகத் தனது சொந்த ஊரில் இருந்துள்ளார். ஏப்ரல் 23-ம் தேதி, தனது வீட்டுக்கு வெளியே பைக்கை சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது, காவலர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவலர்களை அவர் தாக்கியதாகக் கூறி போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். காவல்நிலையத்தில் சாவந்தை பெரிய சங்கிகளால் கட்டிப்போட்டு அமரவைத்திருந்த புகைப்படம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

சிஆர்பிஎஃப் வீரரை சங்கிலியால் கட்டிவைத்த கர்நாடக போலீஸ் - லாக்டெளன் சர்ச்சைகள்

விடுமுறையில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் சாவந்திடம் காவல்துறையினர் கடுமையாக நடந்துக்கொண்டுள்ளனர். வீட்டில் பைக்கை சுத்தம்செய்த வீரரைத் தாக்கி, அவரைக் கைது செய்துள்ளனர். அவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளனர் என சிஆர்பிஎஃப் உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சிஆர்பிஎஃப் உயர் அதிகாரிகள் கர்நாடக மாநில காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கர்நாடக காவல்துறை அதிகாரிகள், “ ஊரடங்கு நேரம் என்பதால் இரண்டு கான்ஸ்டபிள்கள் அந்தப் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் வாசலில் 5 நபர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் 4 பேர் ஓடிவிட்டனர். ஒருவர் மட்டுமே நின்றிருந்தார். முகக்கவசம் அணியாமல் சாலையில் நின்றிருந்ததால், போலீஸார் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இழிவான சொற்களில் பேசியுள்ளார். மேலும் காவல்துறையினரரைத் தாக்கியுள்ளனர். பின்னர்தான் அவர் சிஆர்பிஎஃப் வீரர் என்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு