Published:Updated:

`பீர் பாட்டில்களுக்கு இடையே ரகசிய வாழ்க்கை!’ - போதை மகனால் துணை ஆட்சியருக்கு ஏற்பட்ட துயரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பீர் பாட்டில்களுக்கு இடையே ரகசிய வாழ்க்கை
பீர் பாட்டில்களுக்கு இடையே ரகசிய வாழ்க்கை

மது போதைக்கு அடிமையான பட்டதாரி இளைஞரால், ஓய்வுபெற்ற துணை ஆட்சியருக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், `ஆனைக்கல் காமாட்சி நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்’ என்று தகவல் வந்தது. அதனடிப்படையில் டி.எஸ்.பி கரிகால்பாரி சங்கர் தலைமையிலான போலீஸார் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றபோது, 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்துகிடந்தார். அவருக்கருகில் அமைதியாக நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உயிரிழந்து கிடந்த முதியவரின் இளைய மகன் கார்த்திக் என்பதும், அந்த முதியவர் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் சுப்பிரமணியன் என்பதும் தெரியவந்தது.

கார்த்திக் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்கள்
கார்த்திக் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்கள்

மேலும் கார்த்திக்தான் தனது தந்தையை இரும்புராடால் அடித்துக் கொலை செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே, ``சார் எனக்குப் பசிக்குது. நான் கொஞ்சம் சாப்பிட்டுக்கறேன்” என்று கூறி தனது உணவை எடுத்துக்கொண்டு கொலை செய்யப்பட்ட தந்தையின் சடலத்துக்கு அருகே சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டார் கார்த்திக். அவரது நடவடிக்கைளில் சந்தேகமடைந்த போலீஸார் அந்த வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது முதல் தளத்தில் இருந்த கார்த்திக்கின் அறை முழுவதும் குடித்த காலி பீர் பாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததுடன், பார்சல் உணவு வாங்கிவந்த காகிதங்களையும் அங்கேயே குவித்துவைத்திருந்ததால் கடுமையாக துர்நாற்றம் வீசியிருக்கிறது.

தொடர்ந்து சுப்பிரமணியத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், கார்த்திக்கை முதுநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``ஓய்வுபெற்ற துணை ஆட்சியரான சுப்பிரமணியன் – சரஸ்வதி தம்பதிக்கு இரண்டு மகள்கள், இரட்டைப் பிறப்பு மகன்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பே சரஸ்வதி உயிரிழந்துவிட்டார்.

`பீர் பாட்டில்களுக்கு இடையே ரகசிய வாழ்க்கை!’ - போதை மகனால் துணை ஆட்சியருக்கு ஏற்பட்ட துயரம்!

கார்த்திக்கை தவிர மூவரும் திருமணமாகி சென்னை, பெங்களூர் என செட்டில் ஆகிவிட, பொறியியல் படிப்பு முடித்த கார்த்திக் சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவந்திருக்கிறார். அங்கு சக ஊழியர்களுடன் அவர் பழகியவிதத்தில் வித்தியாசம் தெரிந்ததால் வேலையைவிட்டு நீக்கியது நிர்வாகம். அதனால் ஊர் திரும்பிய கார்த்திக், தனது தந்தையுடன் வசித்துவந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட கார்த்திக், தினமும் வெளியில் சென்று பீர் வாங்கி வந்து அதைக் குடித்துவிட்டு பாட்டில்களை தூக்கி எறியாமல் தனது அறையிலேயே அடுக்கி வைத்திருக்கிறார். அதேபோல் அளவுக்கதிகமான மன அழுத்தத்தில் இருந்த அவர், தூக்க மாத்திரைகளையும் பயன்படுத்தி வந்திருக்கிறார். அந்த பாட்டில்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் ரகசிய வாழ்க்கையை நடத்திவந்திருக்கும் கார்த்திக், மது அருந்துவதற்காக தந்தை சுப்பிரமணியத்திடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துவந்திருக்கிறார்.

சடலமாக துணை ஆட்சியர் சுப்பிரமணியன்
சடலமாக துணை ஆட்சியர் சுப்பிரமணியன்
`தலைக்கேறிய கஞ்சா போதை..' - குன்னூரில் மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம்

அன்றைய தினமும் அப்படித்தான் தகராறு செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரும்புராடால் சுப்பிரமணியத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதில் அவர் மயங்கி விழுந்தவுடன் கார்த்திக் தனது அறைக்கு சென்று படுத்துவிட்டார். மறுநாள் காலையில் தூங்கிக்கொண்டிருக்கும் அப்பா எழுந்திருக்கவில்லை என்று வீட்டுக்கு வெளியில் வந்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு நடைபெற்ற விசாரணையில் அனைத்து உண்மைகளையும் அவரே எங்களிடம் கூறிவிட்டார். வெளியில் அனைவரிடமும் நன்றாகப் பழகும் கார்த்திக், தனது வீட்டுக்குள் வேறு மனநிலையில் இருந்திருக்கிறார். மேலே அவரது அறையில் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்திருக்கிறார் கார்த்திக்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு