Published:Updated:

திருடியதாகச் சந்தேகம்; மொட்டையடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட பட்டியலின நபர்! - பாஜக தலைவர் தலைமறைவு

பட்டியலின நபர் மீது தாக்குதல்

இந்தச் சம்பவத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர் ராதிஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரின் உதவியாளர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

திருடியதாகச் சந்தேகம்; மொட்டையடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட பட்டியலின நபர்! - பாஜக தலைவர் தலைமறைவு

இந்தச் சம்பவத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர் ராதிஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரின் உதவியாளர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பட்டியலின நபர் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், டாய்லெட் சீட்டை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பட்டியலின நபரின் முகத்தில் கரி பூசி, தலையில் மொட்டையடித்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர் ராதிஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரின் உதவியாளர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் பாதிக்கப்பட்ட பட்டியலின நபர் தினக்கூலி தொழிலாளி ராஜேஷ் குமார் எனத் தெரியவந்திருக்கிறது.

பட்டியலின நபர் மீது தாக்குதல்
பட்டியலின நபர் மீது தாக்குதல்

சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, பஹ்ரைச் மாவட்டத்தின் ஹார்டி பகுதியிலுள்ள ஒரு வீட்டில், டாய்லெட் சீட்-ஐ திருடியதாக ராஜேஷ் குமாரைத் தாக்கியவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். பின்னர், அவர்கள் ராஜேஷ் குமாரின் முகத்தில் கரி பூசி, தலையில் மொட்டையடித்துத் தாக்கினர். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக போலீஸாருக்கு இந்த விவகாரம் பற்றி தெரியவந்திருக்கிறது. மேலும் ராஜேஷ் குமார், பா.ஜ.க தலைவர் ராதிஷ்யாம் மிஸ்ராவும், அவரின் உதவியாளர்களும் சாதி கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றம்சாட்டினார்.

கைது
கைது

பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், இதில் ராதிஷ்யாம் மிஸ்ரா உதவியாளர்கள் இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டுவிட்டதாகவும், ராதிஷ்யாம் மிஸ்ரா தலைமறைவானதால் அவரைத் தேடிவருவதாகவும் கூறினார். மேலும், ராஜேஷ் குமார் திருடியதாக இருந்தால் முதலில் அவர்கள் போலீஸிடம் வந்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.