Published:Updated:

கெஜ்ரிவால் அதிகாரிகள்மீது தொடரும் குற்றச்சாட்டுகள்; அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்த துணைநிலை ஆளுநர்

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலக துணைச் செயலாளர் உட்பட மூன்று அதிகாரிகளை, துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா நேற்று பணியிடைநீக்கம் செய்தார்.

கெஜ்ரிவால் அதிகாரிகள்மீது தொடரும் குற்றச்சாட்டுகள்; அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்த துணைநிலை ஆளுநர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலக துணைச் செயலாளர் உட்பட மூன்று அதிகாரிகளை, துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா நேற்று பணியிடைநீக்கம் செய்தார்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்மீது தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஏற்கெனவே, ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைதானதையடுத்து, அவர் வகித்துவந்த துறைகள், துணை முதல்வர் சிசோடியாவுக்கு மாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த திங்களன்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதில் குளறுபடி ஏற்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, மாநில துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா, டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இரண்டு உதவிப் பொறியாளர்களை பணியிடைநீக்கம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலக துணைச் செயலாளர் உட்பட 3 அதிகாரிகளை, துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா நேற்று பணியிடைநீக்கம் செய்திருக்கிறார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா

இது குறித்து வெளியான அறிக்கையின் மூலம், முதல்வர் அலுவகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றிவரும் பிரகாஷ் சந்திர தாகூர் மற்றும் இரண்டு துணைப் பிரிவு மாஜிஸ்ட்ரேட்டுகளான ஹர்ஷித் ஜெயின், தேவேந்திர ஷர்மா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

டெல்லியில் கடந்த வாரம், சட்டம்-ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்யும்விதமாக துணைநிலை ஆளுநர் ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து ஐந்து அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது சற்று பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism