Published:Updated:

40 காவலர்கள் அதிரடி பணியிடமாற்றம்... ரௌடி படப்பை குணாவுக்கு உதவியதால் ஒழுங்கு நடவடிக்கையா?!

40 காவலர்கள்'' பணியிடமாற்றம்!
News
40 காவலர்கள்'' பணியிடமாற்றம்!

தீவிரமாகத் தேடப்பட்டு வரும் பிரபல ரௌடி படப்பை குணாவுக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த படப்பை குணா என்ற பிரபல ரௌடி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவந்தான். இவன் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என மொத்தம் 42 வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளுக்காகத் தேடப்பட்டு வரும் படப்பை குணா தலைமறைவாக இருக்கிறான். இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் குணாவின் மனைவி எல்லம்மாள், தன் கணவரைக் காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் இல்லை. அவர் சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார்' என உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், குணாவின் மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி விசாரணைக்காக காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகக் காவல்துறை
தமிழகக் காவல்துறை

இந்த நிலையில், ரௌடி படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 40 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம், படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 40 காவலர்கள் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

அந்த 40 காவலர்களும் இங்கிருந்து சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.