Published:Updated:

வேகமெடுக்கும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு - தர்மபுரி மருத்துவக் கல்லூரி டீன் இன்று ஆஜர்!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசராஜ், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.

Theni CBCID
Theni CBCID

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரை சி.பி.சி.ஐ.டி தேடிவருகிறது.

Theni CBCID
Theni CBCID

இந்த நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசராஜ், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அவர், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் மருத்துவ மாணவர் இர்ஃபானின் தந்தை மருத்துவர் சஃபி நேற்று முன்தினம் வாணியம்பாடியில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று அதிகாலை சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அழைத்துவரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏனென்றால், உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு நீட் ஏஜென்ட்டை அறிமுகம் செய்துவைத்தவர் சஃபி என்பதால், நீட் ஏஜென்ட் பற்றிய தகவல்களைத் திரட்டிவருகிறது சி.பி.சி.ஐ.டி. இன்று சஃபி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்கிறது தகவல்.

வேகமெடுக்கும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு - தர்மபுரி மருத்துவக் கல்லூரி டீன் இன்று ஆஜர்!

உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன், தேனி நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். மனு, வரும் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.