Published:Updated:

உதய்பூர் கொலை வழக்கு: ``இதைவிட என்ன சான்று வேண்டும்?!" - பாஜக-வைச் சாடிய காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ( ட்விட்டர் )

"பா.ஜ.க தலைவர்களின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளைக் கண்டறிந்தோம். இதைவிடத் தெளிவாக என்ன சான்று இருக்க முடியும்?" - காங்கிரஸ் தலைவர் பவன் கேரா.

உதய்பூர் கொலை வழக்கு: ``இதைவிட என்ன சான்று வேண்டும்?!" - பாஜக-வைச் சாடிய காங்கிரஸ்

"பா.ஜ.க தலைவர்களின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளைக் கண்டறிந்தோம். இதைவிடத் தெளிவாக என்ன சான்று இருக்க முடியும்?" - காங்கிரஸ் தலைவர் பவன் கேரா.

Published:Updated:
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ( ட்விட்டர் )

உதய்பூர் கொலை வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்ஸியிடம் ஒப்படைத்தது குறித்து மத்திய அரசை நோக்கி ராஜஸ்தான் காங்கிரஸ் கேள்வியெழுப்பியிருக்கிறது. நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்ஹையா லால், கடைக்கு வந்த இருவரால் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு ரியாஸ் அட்டாரி, கௌஸ் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும் இருவரும் "இஸ்லாத்தை அவமதித்ததற்காகப் பழிவாங்கினோம்"எனக் கூறினர்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி சில ஊடகச் செய்திகளைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், “கொலையாளிக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பிருப்பதாக வந்த கூற்றுகள் குறித்து நாங்கள் ஆய்வுசெய்தோம், ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர்களின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளைக் கண்டறிந்தோம். இதைவிடத் தெளிவாக என்ன சான்று இருக்க முடியும்?

பாஜக தலைவர்களின் நிகழ்வுகளில் ரியாஸ் அட்டாரி கலந்துகொண்டிருக்கிறார். பாஜக தலைவர்கள் அவரை 'பாய்' என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர். இந்த நாட்டில் என்ன நடக்கிறது... நேற்று, உச்ச நீதிமன்றம் சில தீவிரமான அவதானிப்புகளை வெளியிட்டிருக்கிறது. உதய்பூர் வழக்கு அந்தப் புதிய வெளிச்சத்தில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். நுபுர் ஷர்மா யார்... அவரின் அடையாளம் கட்சியால் நிறுவப்பட்டிருக்கிறது. அவர் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

10 நாள்களுக்குப் பிறகும் அவர் பா.ஜ.க செய்தியாளராகவே பதவியில் தொடர்ந்தார். எனவே, உச்ச நீதிமன்றம் நுபுர் ஷர்மாவுக்கு எதிராகச் சில கருத்துகளைத் தெரிவித்தால், அது நுபுர் ஷர்மாவுக்குமட்டுமானதல்ல... அந்தக் கருத்துகள் பாஜக-வுக்குமானவை. என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டபோது, ​​நாங்கள் அதை வரவேற்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்கள் முதல்வர் அசோக் கெலாட் என்.ஐ.ஏ-க்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இப்போது ரியாஸ் கட்டாரி பற்றிய இந்தத் தகவல்களை மறைக்க மத்திய அரசு அவசரமாக என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் பொய் செய்தியைப் பரப்புவதில் எனக்கு ஆச்சர்யமில்லை. ஆனால், உதய்பூர் கொலையாளிகள் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. ராஜீவ் காந்தியைக் கொல்ல காங்கிரஸுக்குள் நுழைய முயன்ற விடுதலைப் புலிகளின் கொலையாளியின் முயற்சியைப் போன்றே அவர்களது ஊடுருவல் முயற்சி. எனவே காங்கிரஸ், பயங்கரவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பில் ஏமாறுவதை நிறுத்த வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.