Published:Updated:

3 மாதங்களுக்கு முன்பு கொலை: துப்புத்துலக்கிய போலீஸ் - திமுக, அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது!

கொலைசெய்யப்பட்ட அரவிந்தன்

சிவகாசி அருகே கொலை வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

3 மாதங்களுக்கு முன்பு கொலை: துப்புத்துலக்கிய போலீஸ் - திமுக, அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது!

சிவகாசி அருகே கொலை வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட அரவிந்தன்

சிவகாசி, சேனையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மகன் அரவிந்தன் என்கிற பார்த்திபன் (27). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கள்ளிப்பட்டியில் வேலையை முடித்துவிட்டு தன் நண்பர் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவருடன் டூ வீலரில் சிவகாசிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கும்பல் ஒன்று அரவிந்தனை வழிமறித்து, அரிவாள்களைக்கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரவிந்தனையும், காயத்துடன் கிடந்த துரைப்பாண்டியையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். துரைப்பாண்டி தீவிர சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். இந்தச் சம்பவத்தில், துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸார் சந்தேகத்தின் பேரில் சிலர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

துணை காவல் கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த்
துணை காவல் கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த்

விசாரணையின் முடிவில் போலீஸார் சிவகாசி முத்துராமலிங்கநகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (31), பார்த்திபன் (32), முத்துக்கிருஷ்ணன் (23), பழனிசெல்வம் (37), பாண்டியராஜ் 19), மாரீஸ்வரன் (19), மதன் (32), நேருஜிநகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் (27), ரிசர்வ்லைன் சிலோன் காலனியைச் சேர்ந்த ஹரிகுமார் (21), 18 வயது சிறுவன் ஒருவன் ஆகியோரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மறுபுறம், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் தலைமையிலான போலீஸார் ரகசியமாக விசாரணையைத் தீவிரப்படுத்திவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சுமிநாராயணன்
லட்சுமிநாராயணன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer


போலீஸாரின் ரகசிய விசாரணையில், அரவிந்தன் கொலை வழக்கில் அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்படி, சிவகாசியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளை நேற்று காலை போலீஸார் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தனித் தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது போலீஸாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து விசாரணைப்பிடியில் சிக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்த மேலும் நான்கு பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

பிரவீன்
பிரவீன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையின் முடிவில், ஆனையூர் ஊராட்சி மன்றத்தலைவரும், அ.தி.மு.க ஒன்றியச் செயலாளருமான லட்சுமிநாராயணன் (38), தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன் (35), தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் (35), முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்த பொன்ராஜ் (25), சவுந்தர் (25), சமத்துவபுரம் காலனியைச் சேர்ந்த ஜோதிலிங்கம் (22) ஆகிய ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

அந்தோணிராஜ்
அந்தோணிராஜ்

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட 10 பேரின் செல்போன் எண்களைச் சோதனையிட்டதில், கொலை வழக்கில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் லட்சுமிநாராயணன் (38), பிரவீன் (35), அந்தோணிராஜ் (35), பொன்ராஜ் (25), சவுந்தர் (25), ஜோதிலிங்கம் (22) உள்ளிட்ட ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே இவர்கள் ஆறு பேரையும் கைதுசெய்திருக்கிறோம். இவர்களிடம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

கொலை வழக்கில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism