Published:Updated:

மாமன்றக் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக-வினர்! - வருத்தம் தெரிவித்த மேயர்

தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்

செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, மேயர் அறை முன்பாக இருந்த தி.மு.க-வினர் இழிவாகப் பேசி கீழே தள்ளி தாக்குதல் நடத்தி... கேமராக்களை காலால் எட்டி உதைத்தனர்.

மாமன்றக் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக-வினர்! - வருத்தம் தெரிவித்த மேயர்

செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, மேயர் அறை முன்பாக இருந்த தி.மு.க-வினர் இழிவாகப் பேசி கீழே தள்ளி தாக்குதல் நடத்தி... கேமராக்களை காலால் எட்டி உதைத்தனர்.

Published:Updated:
தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்

மதுரை பட்ஜெட் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை, தி.மு.க-வினர் தாக்கியதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக மேயர் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருக்கைப் பிரச்னை
அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருக்கைப் பிரச்னை

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. அப்போது மேயர், கமிஷனர் வருகை தராத நிலையில், இருக்கை ஒதுக்கீடு சம்பந்தமாக தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியே செல்ல வேண்டும் என்று தி.மு.க உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து முறையிட அ.தி.மு.க உறுப்பினர்கள் கூட்டரங்கத்தை விட்டு வெளியேறி மேயர் அறைக்குச் சென்றனர்.

அதனைப் பதிவு செய்ய சென்ற செய்தியாளர்களை, மேயர் அறை முன்பாக இருந்த தி.மு.க-வினர் இழிவாகப் பேசி கீழே தள்ளி தாக்குதல் நடத்தி... கேமராக்களை காலால் எட்டி உதைத்தனர்.

தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்
தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தி.மு.க-வினரின் இந்த செயலைக் கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் மேயர் அறை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை மாநகராட்சிக்குள் மேயர் அறைக்குள் மேயரின் கணவர் பொன் வசந்தும், கவுன்சிலர் அல்லாத தி.மு.க-வினரும், பெண் கவுன்சிலர்களின் உறவினர்களும் இருந்துகொண்டு நிர்வாகம் செய்வதாகவும், அவர்களால்தான் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.

காவல்துறை பாதுகாப்புடன் சென்ற மேயர்
காவல்துறை பாதுகாப்புடன் சென்ற மேயர்

பின்னர், ஒரு மணி நேர போராட்டத்துக்குப்பிறகு மேயர் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மேயரை கூட்ட அரங்குக்கு அழைத்து சென்றனர்.

செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்திருக்கிறார்.

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வினர், செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism