Published:Updated:

``கடன் கொடுத்தா திருப்பிக் கேட்பியா..?" - அரிவாளுடன் வெட்டத் துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்

அரிவாளுடன் வெட்டத் துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்

திருச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்க வந்தவரை, தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவர் அரிவாளை எடுத்து ஓட ஓட வெட்டுவதற்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``கடன் கொடுத்தா திருப்பிக் கேட்பியா..?" - அரிவாளுடன் வெட்டத் துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்

திருச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்க வந்தவரை, தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவர் அரிவாளை எடுத்து ஓட ஓட வெட்டுவதற்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அரிவாளுடன் வெட்டத் துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்யா. இவருடைய கணவர் வெற்றிச்செல்வன், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். கடன் வாங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், ஏதேதோ காரணங்களைச் சொல்லி குணசேகரனை வெற்றிச்செல்வன் ஏமாற்றிவந்திருக்கிறார். இந்த நிலையில், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காக குணசேகரன் நண்பர்கள் சிலருடன், நேற்று மாலை வெற்றிச்செல்வன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது இருவருக்குமிடையே சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு, வாய்த் தகராறாகி ஒருகட்டத்தில் சண்டையாக மாறியிருக்கிறது. இதில் கோபமடைந்த வெற்றிச்செல்வன், ``கடன் கொடுத்தா சும்மா சும்மா வீட்டுக்குவந்து கேட்டுக்கிட்டே இருப்பியா?" என ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடியே அரிவாளை எடுத்துக்கொண்டு குணசேகரனையும், அவருடன் வந்தவர்களையும் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டுவதற்கு முயன்றிருக்கிறார்.

அரிவாளோடு வெற்றிச்செல்வன்
அரிவாளோடு வெற்றிச்செல்வன்

``என்னங்க வேணாம்... வேணாம்" என வெற்றிச்செல்வனின் மனைவி நித்யா தடுத்தபோதிலும், அரிவாளோடு சுற்றிய வெற்றிச்செல்வனுக்கு ஆக்ரோஷம் குறையவில்லை. நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் அதிர்ந்துபோய் நின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது. இந்த விவகாரம் குறித்து சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தலைமறைவாக இருக்கும் வெற்றிச்செல்வனைக் கைதுசெய்ய போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.