Published:Updated:

சேலம்: நடைப்பயிற்சி சென்ற திமுக நிர்வாகி படுகொலை! - முன்விரோதம் காரணமாக உறவினர்கள் வெறிச்செயல்?!

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தி.மு.க நிர்வாகியைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: நடைப்பயிற்சி சென்ற திமுக நிர்வாகி படுகொலை! - முன்விரோதம் காரணமாக உறவினர்கள் வெறிச்செயல்?!

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தி.மு.க நிர்வாகியைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:

சேலம் கொங்கணாபுரம், கண்ணியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். திமுக மாவட்டப் பிரதிநிதியான இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை கண்ணியாம்பட்டியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அவரின் உறவினர்களான மணிகண்டன், சின்னப் பையன் ஆகியோர் கந்தனைக் கீழே தள்ளிவிட்டுத் தாக்கியுள்ளனர்.

கந்தன்
கந்தன்

பின்னர் தாங்கள் மறைத்துவைத்து எடுத்துவந்திருந்த அரிவாளால் கந்தனைச் சரமாரியாக வெட்டினர். அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இருவரும் டூ-வீலரில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கந்தனை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் கந்தன்.

இது குறித்து தகவலறிந்து வந்த கொங்கணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கந்தனுக்கும் மணிகண்டன், சின்னப் பையன் ஆகியோருக்கும் இடையே வழித்தடப் பிரச்னை மற்றும் ஊராட்சித் தேர்தலின்போது முன்விரோதம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிந்து மணிகண்டன் மற்றும் சின்னப் பையனைத் தேடிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism