Published:Updated:

திருச்சி: போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி!

லஞ்சம்

வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்துச் சேர்த்ததாக ஏற்கெனவே அழகரசுமீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

திருச்சி: போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி!

வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்துச் சேர்த்ததாக ஏற்கெனவே அழகரசுமீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Published:Updated:
லஞ்சம்

திருச்சி வட்டாரப் போக்குவரத்து கழக பிராட்டியூர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை ஆணையராகப் (பொறுப்பு) பணியாற்றிவருபவர் அழகரசு. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அழகரசு திருச்சிக்குப் பணி மாறுதலாகி வருவதற்கு முன்பாக, திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றியிருக்கிறார். அப்போதே, அவர்மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்திருக்கின்றன. அதன் உச்சமாக வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடிக்குச் சொத்துச் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அழகரசு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்படியான நிலையில் திருச்சிக்கு வந்த பிறகும், அழகரசுவின் ஊழல் செயல்பாடுகள் குறைந்ததாக இல்லை என்கிறார்கள்.

லஞ்சம்
லஞ்சம்

இந்த நிலையில், அழகரசு மீதான ஊழல் புகார் சமீபத்தில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குப் போயிருக்கிறது. அதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் அழகரசு வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டில் இறங்கினர். திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் அழகரசு வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டதில், பல ஆவணங்கள் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்னென்ன ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன, அவற்றின் மதிப்பு என்ன, என்ன புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடைபெற்றது, ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக இந்த ரெய்டு நடந்திருக்கிறதா என எந்தவித தகவலும், அதிகாரிகள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாகக் கிடைக்கவில்லை.

விஷயமறிந்த அதிகாரிகள் சிலரோ, `சமீபத்திய தீபாவளி வசூலில் எக்கச்சக்கமாக வாங்கிக் குவித்திருக்கிறார். அது குறித்தான புகார்கள் சக ஊழியர்களிடமிருந்து வந்ததன் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடந்திருக்கிறது’ என்கின்றனர்.