Published:Updated:

ஜார்க்கண்ட்: முதல்வரின் உதவியாளர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனை!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ( ட்விட்டர் )

ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், சாஹிப்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பங்கஜ் மிஸ்ரா தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரும், சாஹிப்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பங்கஜ் மிஸ்ரா தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கப் பிரிவுஅதிரடி சோதனை நடத்தியிருக்கிறது.

சாஹிப்கஞ்சில் உள்ள பதர்வா காவல் நிலையத்தில் ஒரு சுங்க வரி ஒப்பந்ததாரர் ஜூன் 2020-ல் புகார் அளித்திருந்தார். அதில், ``சாஹிப்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ பங்கஜ் மிஸ்ரா 2008-2011 இடைப்பட்ட காலத்தில் பணமோசடி செய்திருக்கிறார். அது தொடர்பாக விசாரித்தபோது பங்கஜ் மிஸ்ரா, சோரன் அரசின் அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, பதர்வா போலீஸார் பங்கஜ் மிஸ்ராமீது வழக்கு பதிவுசெய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கப் பிரிவு ஜார்க்கண்டின் சாஹிப்கஞ்ச், பர்ஹெத், ராஜ் மஹால் பகுதிகளில் உள்ள பங்கஜ் மிஸ்ராவுக்குச் சொந்தமான 17 இடங்களில் சோதனை மேற்கொண்டிருக்கிறது. இந்த சோதனை தொடர்பாக அமலாக்கப் பிரிவு, ``ஜார்கண்ட் போலீஸார் மிஸ்ராவுக்கு எதிராகப் பணமோசடி தொடர்பாக பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கப் பிரிவின் சோதனை நடைபெற்றது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தகவல் தெரிவித்திருக்கிறது.

முதல்வரின் நெருங்கிய உதவியாளரும், எம்.எல்.ஏ-வுமான பங்கஜ் மிஸ்ரா வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை மேற்கொண்ட விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!