Published:Updated:

தாவூத்துடன் தொடர்பு: சிறையிலிருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் மாலிக் இல்லத்தில் அமலாக்கப் பிரிவு ரெய்டு

அமலாக்கப் பிரிவு அலுவலகம்

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு குறித்து சிறையிலிருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் இல்லத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

தாவூத்துடன் தொடர்பு: சிறையிலிருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் மாலிக் இல்லத்தில் அமலாக்கப் பிரிவு ரெய்டு

தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு குறித்து சிறையிலிருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் இல்லத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

Published:Updated:
அமலாக்கப் பிரிவு அலுவலகம்

மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பிப்ரவரி 23-ம் தேதி அவரைக் கைதுசெய்தனர். தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரிடமிருந்து நவாப் மாலிக் சொத்தை விலைக்கு வாங்கியிருந்தார். ஹசீனா பார்க்கர் வேறு ஒருவரின் சொத்தை அபகரித்து, அதை நவாப் மாலிக்குக்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவாப் மாலிக் கொடுத்த பணத்தை அவர் சகோதரி தாவூத் இப்ராஹிமிடம் கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மும்பை குர்லாவில் உள்ள நவாப் மாலிக் இல்லத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். பெண் அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர், ஏராளமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் ரெய்டுக்கு வந்தனர். நவாப் மாலிக், தாவூத் சகோதரியிடமிருந்து வாங்கிய குர்லாவில் உள்ள கோவாவாலா காம்பவுண்டிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

அந்தப் பகுதி முழுக்க முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான மத்திய ரிசர்வ் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ரெய்டின்போது அங்கு முதியவர் ஒருவர் வரவழைக்கப்பட்டு அவரிடம் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய சொத்து தொடர்பாக விசாரித்தனர். அதோடு சொத்து ஆவணங்கள் தொடர்பாக சில சந்தேகங்களையும் கேட்டறிந்தனர். நவாப் மாலிக் தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். அமலாக்கப் பிரிவின் இந்த ரெய்டு இந்த வழக்கில் நவாப் மாலிக்குக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவாப் மாலிக்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்திவருகிறது. ஆனால் நவாப் மாலிக்கிடமிருந்த இலாகா மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேபினட் அமைச்சராகத் தொடர்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவிருப்பதால் பா.ஜ.க-வினர் ஆளுங்கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism