Published:Updated:

நள்ளிரவில் அனுப்பப்பட்ட ஆபாசப் படங்கள்; ஈரோடு பள்ளி மாணவிகள் வாட்ஸ்அப் குழுவில் நடந்தது என்ன?

Whatsapp
Whatsapp ( Image by Alfredo Rivera from Pixabay )

சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இந்தக் குழுவில் இணைந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவந்த இந்த வாட்ஸ்அப் குழுவில், ஜூன் 9-ம் தேதி இரவு அருவருக்கத்தக்க சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து `தமிழ் மன்றம்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்திருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதில் இருந்து, கல்வி சம்பந்தமான விஷயங்கள் என அனைத்தையும் அந்தக் குழுவில் பகிர்ந்து வந்துள்ளனர்.

இப்படி ஆக்டிவ்வாக இயங்கிவந்த இந்தக் குழுவினை, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆசிரியர்கள் சொல்லி குழுவில் இணைய லிங்க் கொடுத்திருக்கின்றனர். அந்தவகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இந்தக் குழுவில் இணைந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவந்த இந்த வாட்ஸ்அப் குழுவில், ஜூன் 9-ம் தேதி இரவு அருவருக்கத்தக்க சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்ட ஆபாசப் படங்கள்
வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்ட ஆபாசப் படங்கள்

ஜூன் 9-ம் தேதி நள்ளிரவு சுமார் 1 மணியளவில், அட்மினாக இருந்த முன்னாள் மாணவி ஒருவரின் எண்ணிலிருந்து 5-க்கும் மேற்பட்ட ஆபாசப்படங்கள் குரூப்பில் பகிரப்பட்டிருக்கின்றன. விடியற்காலை ஃபோனை எடுத்துப்பார்த்த பெற்றோர்கள் சிலர், பள்ளி மாணவிகள் குழுவில் ஆபாசப் படங்கள் இருப்பதைக் கண்டு கொதித்துப் போய் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். `இந்த வாட்ஸ்அப் குழு பள்ளி சார்பாக உருவாக்கப்படவில்லை. முன்னாள் மாணவர்களும், பள்ளி ஆசிரியர்கள் சிலரும் இந்த வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கியிருக்கிறார்கள். பள்ளிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என பள்ளியில் பதில் சொல்லியிருக்கின்றனர்.

கொதிப்பு அடங்காத பெற்றோர்கள் காவல்நிலையம் மற்றும் ஈரோடு சைபர் கிரைமில் புகார் கொடுக்க, விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

விவகாரம் வெடித்த வாட்ஸ்அப் குழுவின் மற்றொரு அட்மினான பெண் ஒருவர், பிரச்னை போலீஸ் வரை சென்றதும் உடனடியாகக் குழுவிலிருந்த மாணவிகள் பலரையும் நீக்கியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பள்ளி மாணவி ஒருவரின் உறவினரிடம் பேசினோம். ``குழுவில் ஆபாசப்படத்தை பதிவிட்ட எண்ணை வைத்திருந்த அந்த முன்னாள் மாணவியை, காவல்நிலையத்திற்கு வரவழைத்து போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ``9-ம் தேதி நைட்டு 7 மணிக்கு என்னோட அப்பா, கடைக்கு ஃபோனை எடுத்துட்டு போனப்ப தொலைஞ்சு போயிடுச்சி. அப்படியிருக்க என்னோட ஃபோனை எடுத்த யாரோ அதனை தவறாக யூஸ் பண்ணி ஆபாசப் படங்களை அனுப்பியிருக்காங்க" என விசாரணையில் சொல்லியிருக்கிறார்.

Online class
Online class
representational image
ரோட்டில் போலீஸாருடன் வாக்குவாதம்; காரணம் என்ன; என்ன நடந்தது? : வழக்கறிஞர் பேட்டி

ஆனால், மொபைல் தொலைந்த மறுநாளே அதிலிருந்த செல்ஃபோன் நம்பரை மறுபடியும் வாங்கிவிட்டதாக விசாரணையின்போது அந்த முன்னாள் மாணவி சொல்கிறார். கொரோனா சூழலில் ஒரே நாளில் எப்படி தொலைந்து போன மொபைலில் இருந்த அந்த எண்ணை மீண்டும் பெற்றிருக்க முடியும்? வாட்ஸ்அப்பில் ஆபாசப் படங்களை அனுப்பியது யார் என உடனே விசாரித்து தீவிர நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியிருக்கிறோம். கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடம் படிக்கும் குழந்தைகளுக்கு, இப்படியான பிரச்னைகள் உண்டாவைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

விவகாரம் வெடித்த வாட்ஸ்அப் குழுவின் மற்றொரு அட்மினான பெண் ஒருவர், பிரச்னை போலீஸ் வரை சென்றதும் உடனடியாக குழுவிலிருந்த மாணவிகள் பலரையும் குழுவிலிருந்து நீக்கியிருக்கிறார். மேலும், புகார் கொடுத்த பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசிய அந்தப் பெண் `வாட்ஸ்அப்ல தவறுதலாக போட்டதுக்கு நீங்க ஏன் இந்த விஷயத்தை இவ்ளோ பெரிய பிரச்னையாக்குறீங்க?’ எனக் கேட்டிருக்கிறார்.

காவல்துறை இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு