Published:Updated:

``உங்க உசுருக்கு எவ்ளோ பணம்'னு முடிவு பண்ணிக்கோங்க..." - எடப்பாடி சம்பந்தியை அலற வைத்த போன் கால்!

மிரட்டல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியிடம் மர்ம நபர்கள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

``உங்க உசுருக்கு எவ்ளோ பணம்'னு முடிவு பண்ணிக்கோங்க..." - எடப்பாடி சம்பந்தியை அலற வைத்த போன் கால்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியிடம் மர்ம நபர்கள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Published:Updated:
மிரட்டல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை உழவன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். சம்பந்தி முறை உறவு. இவருக்கு கடந்த 2021 டிசம்பர் 26-ம் தேதி போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், ``ஒழுங்கா நாங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடு. இல்லைன்னா உங்களை கொலை பண்ணக் கூட தயங்க மாட்டோம்" எனச் சொல்லி அதிர வைத்துள்ளனர். இதில் பயந்துபோன சுப்பிரமணியன் உடனே அந்த நம்பரை பிளாக் செய்ய, டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் அந்த மர்மக் கும்பல் மறுபடியும் சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருக்கிறது. தொடர்ச்சியாக வந்த மெசேஜ்களால் பயந்து போன சுப்பிரமணியன், ஜனவரி 6-ம் தேதி இந்த விவகாரத்தை ஈரோடு எஸ்.பி சசிமோகன் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் கொடுத்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியன்

அதனையடுத்து வழக்கு பதிவு செய்து களத்தில் இறங்கிய போலீஸார், மர்ம நபர்கள் பயன்படுத்தி போன் நம்பர் மற்றும் மெசேஜை வைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி ரோடு உதயம் நகரைச் சேர்ந்த பால்ராஜ், சந்திரன், சீனிவாச ராவ் ஆகிய மூவரை கைது செய்து கோபி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த விவகாரம் குறித்து ஈரோடு எஸ்.பி சசிமோகனிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்ட நபர்கள் சுப்பிரமணியனின் செல்போனுக்கு தொடர்ச்சியாக பலமுறை போன் செய்தும், மெசேஜ் மூலமாகவும் பணம் கேட்டு மிரட்டிட்டு வந்துருக்காங்க. ஆனா, எவ்ளோ பணம் வேணும்னு எல்லாம் சொல்லலை. ‘பணம் கொடுக்கலைன்னா உங்களை கொன்னுடுவோம். உங்களைப் பத்தின உண்மைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீங்களே எவ்ளோ பணத்தை கொடுக்குறதுன்னு ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க’ன்னு மெசேஜ் அனுப்பி மிரட்டியிருக்காங்க. போன்கால் மற்றும் மெசேஜ் வந்த நம்பரை செக் பண்ணுனப்போ, அது மைசூர்ல ஒரு லேடியோட பேர்ல வாங்கியிருந்த சிம் என்பது தெரியவந்தது. உடனே செல்போன் சிக்னலை வச்சி தேடுனப்ப சத்தியமங்கலம் பக்கத்துல அந்த லேடியை டிரேஸ் பண்ணி பிடிச்சோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈரோடு எஸ்.பி சசிமோகன்
ஈரோடு எஸ்.பி சசிமோகன்

`சந்திரன் என்பவர் மைசூருக்கு வாழைக்காய் வியாபாரத்துக்காக அடிக்கடி வருவாரு. அதனால, எனக்கு கர்நாடகா சிம் கார்டு வேணும்னு கேட்டதால தான் நான் வாங்கிக் கொடுத்தேன். மத்தபடி வேற எதுவும் எனக்குத் தெரியாது’ என அந்த லேடி சொன்னாங்க. அவங்ககிட்ட இருந்து தகவலை வாங்கித் தான் சந்திரன், பால்ராஜ், சீனிவாசராவ் ஆகிய 3 பேரையும் பிடிச்சோம். விசாரணையில், ‘கொரோனா லாக்டெளனால 2 வருஷமா தொழில்'ல சரியா வருமானம் இல்லை. சுப்பிரமணியன் சத்தியமங்கலத்துல மில் வச்சிருக்கதால அவர்கிட்ட பணம் கேட்டா கொடுத்திடுவாருன்னு இப்படி செஞ்சிட்டோம். நாங்க பலதடவை அவர்கிட்ட பேசியும், மெசேஜ் அனுப்பியும் அவர் எந்த ரெஸ்பான்ஸ்ஸூம் பண்ணலைன்னு அப்படியே விட்டுட்டோம்’ என்றுள்ளனர். கைதாகியுள்ள நபர்கள் மீது இதுவரை எந்த வழக்குகளும் இல்லை. பணத்துக்காக அமெச்சூராக இப்படி ஒரு முயற்சியை செய்துள்ளனர். இதுக்காக தனியாக ஒரு செல்போனை வாங்கி பயன்படுத்தியிருக்காங்க. இந்த மிரட்டலுக்குப் பின் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா எனவும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism