Published:Updated:

திருமணம் மீறிய உறவு... பெண்ணைக் கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்த வங்கி ஊழியர்- திருச்சியில் பயங்கரம்

சம்பவ இடத்தில் போலீஸார்

பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த வினோத்குமார், தண்டவாளத்தில் தலையைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் மீறிய உறவு... பெண்ணைக் கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்த வங்கி ஊழியர்- திருச்சியில் பயங்கரம்

பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த வினோத்குமார், தண்டவாளத்தில் தலையைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சம்பவ இடத்தில் போலீஸார்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதியைச் சேர்ந்தவர்வர் யமுனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (31). ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இவர் வசித்துவந்த அதே பகுதியில் தனியார் வங்கி ஊழியரான வினோத்குமார் (35) என்பவரும் வசித்துவந்தார். இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஒரே பகுதியில் வசித்துவந்த யமுனாவுக்கும் வினோத்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துவந்ததோடு, காதலித்தும் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கொலை
கொலை

இந்த நிலையில் நேற்று யமுனாவின் வீட்டுக்குச் சென்ற வினோத்குமார், கத்தியை எடுத்து அவர் கழுத்தில் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே யமுனா பரிதாபமாக பலியாகியிருக்கிறார். யமுனாவைக் கொலை செய்த பயத்தில் அங்கிருந்து ஓடிய வினோத், விவேகானந்தர் நகர் பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்திருக்கிறார். இதில் வினோத்குமாரின் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே அவரும் பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ், இன்ஸ்பெக்டர் தனசேகர், மாநகர துணை கமிஷனர் ஸ்ரீதேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், வினோத் உடலையும், யமுனா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

யமுனா வீட்டுக்கு வினோத்குமார் வந்தபோது இருவருக்கும் இடையே கடுமையான தகராறு நடந்திருக்கிறது. அதன் பிறகே வினோத்குமார் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்கின்றனர் விஷயமறிந்த போலீஸார். மேலும், இந்தத் திருமணம் மீறிய உறவு விவகாரம் தனது குடும்பத்துக்குத் தெரிந்து பிரச்னையானதால், அதன் பிறகு வினோத்குமாரைச் சந்திக்க யமுனா மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இது கடும் கோபத்தை ஏற்படுத்தவே, ஒருவேளை வினோத்குமார் இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என நினைக்கின்றனர் போலீஸார். ஆனால் உண்மையிலேயே இருவருக்குமிடையே என்ன நடந்தது... எதற்காக வினோத் கொலை செய்தார்... இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்கள்... என போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.