Published:Updated:

வேலூர்: போலி சாதிச் சான்றிதழ்; ஊராட்சி மன்றத் தலைவரின் ‘பவர்’ பறிப்பு - 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

கல்பனா சுரேஷ்
News
கல்பனா சுரேஷ்

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவர் மீது எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வேலூர்: போலி சாதிச் சான்றிதழ்; ஊராட்சி மன்றத் தலைவரின் ‘பவர்’ பறிப்பு - 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவர் மீது எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
கல்பனா சுரேஷ்
News
கல்பனா சுரேஷ்

மிழகத்தில், மறுசீரமைக்கப்பட்ட 9 புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 அக்டோபர் மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் 609 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்று, ஊராட்சி மன்றத்தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்பனா சுரேஷ்
கல்பனா சுரேஷ்

இந்த நிலையில், கல்பனா சுரேஷ் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தேர்தல் வேட்புமனுவில் ‘ஆதி திராவிடர்’ என போலி சாதிச் சான்றிதழை இணைத்துக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளார் எனவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கல்பனா சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்ட தோளப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடமும் புகாரளித்தார். உயர் நீதிமன்றத்தையும் அவர் அணுகியிருந்தார்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ‘விழிக்கண்’ குழு நடத்திய விசாரணையில், கல்பனா சுரேஷ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சாதிச்சான்றிதழ் ‘போலி’ என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரின் சாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதோடு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கான ‘செக்’ பவரும் அதிரடியாகப் பறிக்கப்பட்டது. இதுதொடர்பான விவரங்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

போலி சாதிச் சான்றிதழ்
போலி சாதிச் சான்றிதழ்

இந்த நிலையில், கல்பனா சுரேஷ் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவதற்கான குற்றவியல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்), போலிச் சான்றிதழை கொடுத்து ஏமாற்றுதல், பொதுப் பதிவேட்டின் பதிவுகளை போலியாக உருவாக்குதல், தெரிந்தே குற்றம்புரிதல், எஸ்.சி-எஸ்.சி வன்கொடுமை தடுப்புப் பிரிவுகள் என மொத்தமாக 7 பிரிவுகளின்கீழ் கல்பனா சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனிடையே, கல்பனா சுரேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.