Published:Updated:

`தகாத முறையில் நடந்து கொண்டார்’ - இந்திய தேசிய அணியின் பயிற்சியாளர் மீது பெண் cyclist புகார்

வீராங்கனையின் புகாரை தொடர்ந்து, உடனடியாக அவர் பாதுகாப்பு கருதி இந்தியா அழைத்து வரப்பட்டார். இது குறித்து கமிட்டி உறுப்பினர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

`தகாத முறையில் நடந்து கொண்டார்’ - இந்திய தேசிய அணியின் பயிற்சியாளர் மீது பெண் cyclist புகார்

வீராங்கனையின் புகாரை தொடர்ந்து, உடனடியாக அவர் பாதுகாப்பு கருதி இந்தியா அழைத்து வரப்பட்டார். இது குறித்து கமிட்டி உறுப்பினர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Published:Updated:

சைக்ளிங் செய்யும் பெண் வீராங்கனையிடம், இந்திய தேசிய அணியின் பயிற்சியாளர் தகாத முறையில் நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.

ஜூன் 18-ம் தேதியில் இருந்து 22 வரை புதுதில்லியில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக, இந்திய அணி ஸ்லோவேனியாவில் பயிற்சி முகாமுக்குச் சென்றுள்ளது. பயிற்சி முகாமில் பெண் வீராங்கனையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, தேசிய அணியின் பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Cycling
Cycling
Photo by Flo Karr on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீராங்கனையின் புகாரைத் தொடர்ந்து, உடனடியாக அவர் பாதுகாப்பு கருதி இந்தியா அழைத்து வரப்பட்டார். இது குறித்து கமிட்டி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இரண்டு தனி குழுக்களை அமைத்து இந்தப் புகாரை விசாரிக்க உள்ளது. இந்த விஷயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, விரைவில் தீர்க்கப்படும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பயிற்சியாளர் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் பரிந்துரையின் மூலமாக சேர்க்கப்பட்டவர் என இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பும் அதன் அதிகாரிகளும் புகார்தாரரோடு நிற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism