Published:Updated:

போக்சோ வழக்கு... ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதி! - விரட்டிப்பிடித்த போலீஸ்

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் திடீரென தப்பி ஓடினார். அவரை போலீஸார் பத்து நிமிடங்களில் விரட்டிப்பிடித்து கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்சோ வழக்கு... ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதி! - விரட்டிப்பிடித்த போலீஸ்

வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் திடீரென தப்பி ஓடினார். அவரை போலீஸார் பத்து நிமிடங்களில் விரட்டிப்பிடித்து கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 2021-ல் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை வன்னியம்பட்டி போலீஸார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கைதுசெய்தனர். இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

கைதி சுரேஷ்
கைதி சுரேஷ்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷை விருதுநகர் ஆயுதப்படை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவந்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து போலீஸிடம், சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி சுரேஷ் தப்பி ஓடியுள்ளார். இதனால் நீதிமன்ற வளாகமே பரபரப்பானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸார், பேருந்து நிலையம், முக்கியச் சந்திப்புகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகே சுரேஷ் சென்றுகொண்டிருப்பதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சுரேஷை சுற்றிவளைத்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

தப்பியோடிய குற்றவாளியை 10 நிமிடங்களில் போலீஸார் விரட்டிப்பிடித்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism