Published:Updated:

கோவையில் பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம்! - விமான நிலையத்தில் பரபரப்பு

தங்கம்
தங்கம்

கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்திவந்தவர்கள் சிக்கினர்.

ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்
திருச்சி: ஏர்போர்ட்டை நோட்டமிடும்`மீன்கள்';       தங்கம் கடத்தும் 'குருவிகள்'; நடப்பது என்ன?!

அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய ஆறு பேரிடமிருந்து ஏழு கிலோ, 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ,ஆடைகளில் மறைத்து கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றிக் கடத்துவது அதிகரித்திருக்கிறது.

தங்கம்
தங்கம்

இவர்கள் ஆறு பேரும் கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், வேலூர், திட்டக்குடி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ``பேஸ்ட் வடிவிலான தங்கதைப் பொறுத்தவரை, கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே கடத்திவருபவர்களைப் பிடிக்க முடியும். வழக்கமான சோதனைகளில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தைப் பிடிக்க முடியாது.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

இவர்கள் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்வர்கள் என்பதால், இவர்களை ஓரே நபர் அனுப்பினாரா அல்லது வெவ்வேறு நபர்கள் அனுப்பியிருக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு