Published:Updated:

திருச்சி: விமான நிலையத்தில் தொடரும் தங்கக் கடத்தல் - கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பா?

தங்கத்தைக் கடத்தி வருவதற்கு, திருச்சியில் பெரிய நெட்வொர்க் உள்ளது. இது அத்தனையும் போலீஸாருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிட் தங்கத்தைக்கூட கடத்திவர முடியாது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். இது எப்படிச் சாத்தியம்? கடந்த ஆறு மாதங்களில் இப்படிப் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிலர் பணத்தாசையால், நாட்டுக்குப் பல கோடி இழப்பு ஏற்படுத்துவதோடு, பல கடத்தல்காரர்களையும் உருவாக்குகிறார்கள்" என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். என்னதான் நடக்கிறது திருச்சி விமான நிலையத்தில்..?

திருச்சி விமானநிலையம்
திருச்சி விமானநிலையம்

திருச்சி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கத்தைக் கடத்திவரும் சம்பவம் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது என்பவர் ஒரு கிலோ தங்கத்தைக் கடத்திவந்திருக்கிறார். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும், அந்தத் தங்கத்தை, திருச்சியில் ஏஜென்ட்களிடம் தர மறுக்கவே, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின் ஏர்போர்ட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரித்த போலீஸார் அவர்கள் கடத்திவந்த தங்கத்தைப் பறிமுதல் செய்து, இரண்டு பேரைக் கைதுசெய்தனர்.

அதேபோல், கடந்த 25-ம் தேதி சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடி மதிப்புள்ள ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை வெளிநாடுகளிலிருந்து குருவிகள் மூலம் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

அதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி மன்னார்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அவரது இடுப்பில் கட்டிங் பிளேயர் ரப்பருக்குள் மறைத்து கடத்திவந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 230 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுபோல் பல சம்பவங்கள் திருச்சி விமான நிலையத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் இதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை என்கிற எதிர்ப்புக்குரலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து வழக்கறிஞர் கிஷோரிடம் பேசினோம்.``பல சிறப்புகளைக்கொண்ட விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் கூடாரமாக மாறியிருக்கிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானச் சேவைகள் நாள்தோறும் இயக்கப்பட்டுவருகின்றன.

வழக்கறிஞர்  கிஷோர்
வழக்கறிஞர் கிஷோர்

தற்போது கொரோனா இரண்டாவது அலை ருத்ர தாண்டவம் ஆடிவரும் நிலையில், இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துவது குறைந்தபாடில்லை. கடந்த மூன்று மாதங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட தங்கக் கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிநுட்பமான ஸ்கேனர் இருக்கிறது. அது மனித உடலிலுள்ள நரம்புகள் முதல் தசைகள் வரையிலும் ஸ்கேன் செய்யும் வல்லமைகொண்டது.

திருச்சி சாலை - ராமநாதபுரம்
திருச்சி சாலை - ராமநாதபுரம்

ஆனால், இங்கு கிலோ கணக்கில் தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வருகிறது என்றால் எப்படிச் சாத்தியம்? கஸ்டம்ஸ் அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் கடத்தல் தங்கம் வெளியே வர வாய்ப்பே இல்லை. இதுவும் பிரச்னைகள் நடந்த பிறகுதான் நமக்குத் தெரியவருகிறது. இதுபோல் எத்தனை கிலோ தங்கம் வெளியே சென்றது என்று தெரியவில்லை. தங்கத்தைக் கடத்தி வருவதற்குத் திருச்சியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இது அத்தனையும் போலீஸாருக்கு நன்கு தெரியும். ஆனால், நடவடிக்கை எடுப்பதில்லை. இவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அலட்சியமாக நடப்பதால் நாட்டுக்குத்தான் பல கோடி இழப்பு. அதோடு, பல கடத்தல்காரர்களும் உருவாகிறார்கள்" என்று காட்டமாகப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு