Published:Updated:

விழுப்புரம்: தாட்கோ திட்டத்தில் கடன் பெற ரூ.10,000 லஞ்சம்; பதிவு எழுத்தர் கைது!

கைது - விழுப்புரம்

தாட்கோ திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பித்த பெண்ணிடம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட பதிவு எழுத்தரை அதிரடியாக கைது செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

விழுப்புரம்: தாட்கோ திட்டத்தில் கடன் பெற ரூ.10,000 லஞ்சம்; பதிவு எழுத்தர் கைது!

தாட்கோ திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பித்த பெண்ணிடம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட பதிவு எழுத்தரை அதிரடியாக கைது செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

Published:Updated:
கைது - விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த குணசீலனின் மனைவி பார்வதி, மகளிர் சுய உதவிக்குழுவிற்காக தாட்கோ திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, பணியில் இருந்த பதிவு எழுத்தர் சுரேஷ்குமார் விண்ணப்பத்தை ஏற்க வேண்டுமெனில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டுமென கேட்டாராம்.  இது குறித்து பார்வதி, தன் கணவர் குணசீலனிடம் தெரிவித்துள்ளார்.

பதிவு எழுத்தர் சுரேஷ்குமார்
பதிவு எழுத்தர் சுரேஷ்குமார்

லஞ்சம் தர விரும்பாத குணசீலன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், குணசீலனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பியுள்ளனர். அதன்படி இன்று தாட்கோ அலுவலகம் சென்ற குணசீலன், பதிவு எழுத்தர் சுரேஷ்குமாரிடன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அவர் அந்த பணத்தை லஞ்சமாக பெறும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுரேஷ்குமாரை கையும், களவுமாக பிடித்து தாட்கோ அலுவலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டனர்.

மேலும், அவரிடமிருந்து லஞ்சமாக பெற்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். இதுமட்டுமின்றி, கணக்கில் வராத 34,000 ரூபாய் சோதனையின் போது அதே அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.