Published:Updated:

சின்னசேலம்: கலவரத்தில் களவுபோன பொருள்கள்! - திருப்பி ஒப்படைக்கும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை

கலவரம் | தனியார் பள்ளி

சின்னசேலம் கலவரத்தின்போது தனியார் பள்ளியிலிருந்து பொருள்களை எடுத்துச் சென்றவர்கள், மீண்டும் அவற்றைப் பள்ளியிலேயே ஒப்படைக்கும்படி தண்டோரா அறிவிப்பு செய்துவருகிறது சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம்.

சின்னசேலம்: கலவரத்தில் களவுபோன பொருள்கள்! - திருப்பி ஒப்படைக்கும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை

சின்னசேலம் கலவரத்தின்போது தனியார் பள்ளியிலிருந்து பொருள்களை எடுத்துச் சென்றவர்கள், மீண்டும் அவற்றைப் பள்ளியிலேயே ஒப்படைக்கும்படி தண்டோரா அறிவிப்பு செய்துவருகிறது சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம்.

Published:Updated:
கலவரம் | தனியார் பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கணியாமூர் கிராமத்திலிருக்கும் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், அது கொலை என்றும், அதற்கு நீதி வேண்டும் என்றும் கூறி கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பேருந்துகளும் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்தக் கலவரத்துக்கிடையே கணியாமூர் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்களின் இருக்கைகள், மின்விசிறிகள், ஏர் கூலர், ஏ.சி., கம்ப்யூட்டர் போன்றவற்றுடன் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் தூக்கிச் சென்றனர்.

கணியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு
கணியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு

அந்தப் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானதுடன், நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்தியாகவும் வெளியாகின. மாணவியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் பள்ளியிலிருந்து பொருள்களை எடுத்துச் சென்றவர்கள் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்றும், அதனால் எடுத்துச் சென்ற பொருள்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் அடிப்படையில், கலவரத்தின்போது பள்ளியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பொருள்கள் மற்றும் ஆடு, மாடு, கோழிகளைப் பள்ளியில் ஒப்படைக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிராம மக்களுக்கு தண்டோரா போடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!