Published:Updated:

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தற்கொலை முயற்சி - போலீஸ் விசாரணை!

தற்கொலை முயற்சி!
News
தற்கொலை முயற்சி!

தன் உத்தரவுக்கு செந்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் சமர்ப்பித்த பாடக்குறிப்பேட்டில் தலைமையாசிரியர் சித்ரா தொடர்ந்து கையெழுத்து போடாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் விலங்கியல்துறை முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் செந்தில் (36). இவர் நாட்டுநலப்பணி திட்ட அலுவலராகவும் சமூக பணியாற்றி வருகிறார். அரசு பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வரும் சித்ரா என்பவர் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதாகவும், செருப்பு அணிந்து கொண்டு ஆசிரியர்கள், தன் அறைக்கு வரக்கூடாது என்றும், வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வேறு

அரசுப்பள்ளி ஆசிரியர் செந்தில்
அரசுப்பள்ளி ஆசிரியர் செந்தில்

பணிகளை செய்ய நிர்பந்தித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், விலங்கியல்துறை ஆசிரியர் செந்தில் 'செருப்பு அணிந்து கொண்டு தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது' என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் சமர்ப்பித்த பாடக்குறிப்பேட்டில் தலைமையாசிரியர் சித்ரா தொடர்ந்து கையெழுத்து போடாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் செந்தில், நேற்று (07.12.2021)  பள்ளியில் அளவுக்கு அதிகமாக  தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்திருக்கிறார். அதையடுத்து, மாணவர்களும், சக ஆசிரியர்களும் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு, செந்திலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை, சக ஆசிரியர்களும், மாணவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ``தலைமையாசிரியை சித்ராவின் மனநிலை வித்யாசமானது. எல்லோரிடமும் கடுமையாக பேசும் வழக்கமுடையவர். மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் விரோதப்போக்கை கடைபிடிப்பவர். பணியிடத்தில் அவர் அளித்த அழுத்தத்தால் தான் செந்தில் இப்படி செய்து கொண்டாரோ என்று சந்தேகம் எழுகிறது. எனவே, தலைமையாசிரியர் சித்ரா மீது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக பாலையூர் காவல்நிலைய ஆய்வாளர் விசித்ராவிடம் விசாரித்தோம். ``தற்கொலைக்கு முயன்ற செந்தில் தரப்பிலிருந்து புகார் அளித்திருக்கிறார்கள். அதற்கு மனு ரசீது தந்திருக்கிறோம். இன்னும் எப்.ஐ.ஆர் பதியவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.