Published:Updated:

புதுக்கோட்டை: லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணங்களின் நகல் விற்பனை - ஊழியர் சஸ்பெண்ட்!

ஊழியர் சஸ்பெண்ட்

ஆவணக் காப்பக அறையில் உதவியாளராகப் பணியாற்றிவந்த நாகம்மாள் என்பவர், பணத்தை லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆவணங்களின் நகலை விற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை: லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணங்களின் நகல் விற்பனை - ஊழியர் சஸ்பெண்ட்!

ஆவணக் காப்பக அறையில் உதவியாளராகப் பணியாற்றிவந்த நாகம்மாள் என்பவர், பணத்தை லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆவணங்களின் நகலை விற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
ஊழியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவணக் காப்பக அறை செயல்பட்டுவருகிறது. இங்கு, நில உடைமை ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பழைமையான ஆவணங்கள் அனைத்தும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. பழைய நில ஆவணங்களின் நகலை ஒருவர் பெற வேண்டுமென்றால், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (தனிப்பிரிவு) விண்ணப்பித்துப் பெற வேண்டும். ஆனால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சட்டத்துக்குப் புறம்பாக ரூ.500 முதல் ரூ.2,000 வரை லஞ்சமாக வாங்கிக்கொண்டு பழைய ஆவணங்களின் நகலைக் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.

லஞ்சப்  புகார்
லஞ்சப் புகார்

இந்த நிலையில்தான், ஆவணக் காப்பக அறையில் உதவியாளராகப் பணியாற்றிவந்த நாகம்மாள் என்பவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆவணங்களின் நகலை விற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே லஞ்சம் வாங்கிய ஊழியர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கவனத்துக்குச் சென்றதையடுத்து, அவர் உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். விசாரணையில், நாகம்மாள் லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டது. அதனால், நாகம்மாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism