Published:Updated:

சாத்தூர்: பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர்... விடுவிக்கக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

சாத்தூர் அருகே பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கணித ஆசிரியரை விடுதலை செய்யவேண்டும் என அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர்: பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர்... விடுவிக்கக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

சாத்தூர் அருகே பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கணித ஆசிரியரை விடுதலை செய்யவேண்டும் என அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

சாத்தூர் அருகே உள்ள புதுச்சூரங்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்துக்கொண்டதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் தாமோதரன், போக்சோ வழக்கின்கீழ் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று, புதுசூரங்குடி அரசுப் பள்ளி மாணவர்கள், ``எங்கள் கணித ஆசிரியர் தாமோதரன் எந்த தவறும் செய்யவில்லை. அவர் நிரபராதி. எனவே அவரை விடுதலை செய்யவேண்டும். அவர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பள்ளிக்கு வரும்வரை நாங்கள் வகுப்பறைக்குச் செல்லமாட்டோம்" எனக்கூறி பள்ளிக்குள் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலரின் ஆலோசனையின்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாணவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதித் தருமாறு அதிகாரிகள் கேட்டனர். அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கோரிக்கை மனு
கோரிக்கை மனு
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வகுப்பு புறக்கணிப்பு
வகுப்பு புறக்கணிப்பு

அதிகாரிகளின் உறுதியைத் தொடர்ந்து, 268 பேர் படிக்கும் அந்தப் பள்ளியில் 172 மாணவர்கள் கணித ஆசிரியர் தாமோதரன் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை மனு எழுதி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கணித ஆசிரியர் தாமோதரன் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் போலீஸில் புகார் அளித்திருக்கும் நிலையில், ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு அளித்திருப்பது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை திகைக்கச் செய்துள்ளது.